முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கொள்ளு ரசம்

Cooking time in minutes: 
20
Ingredients: 

கொள்ளு ரசம்  செய்யத்  தேவையான பொருள்கள்;

 

  1. கொள்ளு - ½ கப்.
  2. மிளகு - 1/2 ஸ்பூன். 
  3. சீரகம் - 1/2 ஸ்பூன்.
  4. பூண்டு - 10 பல். 
  5. கறிவேப்பிலை,மல்லி  -  சிறிதளவு.
  6. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை.  
  7. தக்காளி -  2.
  8. ரிபைன்ட் ஆயில் – 2 ஸ்பூன்.
  9. கடுகு,உளுந்து - 1/2 ஸ்பூன். 
  10. சீரகம் - 1/2 ஸ்பூன். 
  11. சோம்பு - 1 சிட்டிகை.  
  12. வெந்தையம் - 1 சிட்டிகை.  
  13. பெருங்காய தூள் - 1/4 ஸ்பூன்.  
  14. புளி - சிறிதளவு.
  15. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;-

  1. ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் சிறிதளவு புளியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து புளிக்கரைசலை தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாய் வைத்து 1/2 கப் கொள்ளை போட்டு நன்றாக வறுக்கவும். 
  3. ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி வறுத்த கொள்ளை போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். 
  4. அடுப்பில் குக்கரை வைத்து ஊற வைத்த கொள்ளை போட்டு,3 கப் தண்ணீர் ஊற்றி 6 விசில் வரும் வரை வேக வைத்து குக்கரை இறக்கி வைக்கவும்.
  5. மிக்சி ஜாரில் 1/2 ஸ்பூன் மிளகு,1/2 ஸ்பூன் சீரகம்,10 பல் பூண்டு,கறிவேப்பிலை,மல்லி சிறிதளவு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் போட்டு அரைக்கவும்,இதனுடன்  பொடியாக நறுக்கிய 2 தக்காளியை போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாய் வைத்து நன்கு காய்ந்த உடன் ரிபைன்ட் ஆயில் 2 ஸ்பூன் ஊற்றவும்.
  7. எண்ணெய் சூடானவுடன் 1/2 ஸ்பூன் கடுகு,உளுந்து,1/2 ஸ்பூன் சீரகம், ஒரு சிட்டிகை சோம்பு, ஒரு சிட்டிகை வெந்தயம் 1/4 ஸ்பூன் பெருங்காய தூள், 10 கருவேப்பிள்ளை,சிறிதளவு மல்லி போட்டு மிதமான சூட்டில் வதக்கவும்.
  8. மிக்சி ஜாரில் அரைத்து வைத்த விழுதை  போட்டு கிளறிவிடவும்.
  9. தயார் செய்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி கலந்து விடவும்.
  10. இதனுடன் கொள்ளை வேக வைத்த நீரை  ஊற்றி , தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விட்டு 10 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க வைத்து இறக்கவும்.
  11. சுவையான கொள்ளு ரசம் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago