முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிக்கன் ப்ரை

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

சிக்கன் ப்ரை செய்யத் தேவையான பொருட்கள்.

  1. போன்லெஸ் சிக்கன் - 4 துண்டுகள்.
  2. சோயா சாஸ் - 150 கிராம்.
  3. இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்.
  4. தேன் - ஒரு ஸ்பூன்.
  5. மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்.
  6. மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன்.
  7. மிளகு தூள் - ஒரு ஸ்பூன்.
  8. உப்பு - தேவையான அளவு.
  9. எண்ணெய் - 1/4 லிட்டர்.

 

Method: 

 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் 150 கிராம் சோயா சாஸ் எடுத்துக்கொள்ளவும்,இதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,தேன் ஒரு ஸ்பூன்,மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்,மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்,மிளகு தூள் ஒரு ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு தட்டில் 4 போன்லெஸ் சிக்கன் துண்டுகளை எடுத்துக்கொள்ளவும்.
  3. இதனுடன் தயார் செய்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது,தேன்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,மிளகு தூள்  மற்றும்  உப்பு போட்டு  கலந்து வைத்துள்ள கலவையை ஒரு பிரஸ் மூலம் சிறிதளவு எடுத்து சிக்கன் துண்டின்  எல்லா பக்கங்களிலும் ஒட்டும்படி  கலவையை பூசி  விடவும்.
  4. மீதம் உள்ள கலவையை சிக்கன் துண்டின் மேல் ஊற்றி  கலந்து விட்டு சிக்கனை  சிறிது நேரம் ஊற வைக்கவும்.
  5. அடுப்பில் கடாய்யை வைத்து 1/4 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
  6. எண்ணெய்  சூடானவுடன்  தயார் செய்து வைத்துள்ள போன்லெஸ் சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு நன்றாக பொரிக்கவும்.
  7. கடாய்யை மூடிபோட்டு மூடி சிக்கனை நன்றாக வேக விடவும்
  8. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  9. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  10. சுவையான சிக்கன் ப்ரை ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago