Idhayam Matrimony

அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தமா..? நயினார் நாகேந்திரன் விளக்கம்

சனிக்கிழமை, 10 ஜனவரி 2026      தமிழகம்
Nayanar-Nagendran 2023-11-1

கோவை, அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க., 56 தொகுதிகளும், அமைச்சரவையில் பங்கும் கேட்டு அழுத்தம் கொடுப்பதாக தகவல் பரவியது. டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அவரிடம் இவ்வாறு வலியுறுத்தியதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில், கோவை வந்த தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-   தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இருக்கிறது. எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர். அமைச்சரவையில் இடம் கேட்டு நாங்கள் அழுத்தம் எதுவும் கொடுக்கவில்லை. தே.மு.தி.க. கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பதாக கூறியிருக்கிறது. அதன்பிறகு, எங்கள் கருத்தை தெரிவிக்கிறேன். எங்கள் கூட்டணிக்கு முதலில் அன்புமணி ராமதாஸ் வந்திருக்கிறார். இன்னும் நாள் இருக்கிறது. தை பிறந்தால் வழி பிறக்கும்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து