முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

செட்டிநாடு நாட்டுக்கோழி கிரேவி

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

செட்டிநாடு நாட்டுக்கோழி கிரேவி செய்யத் தேவையான பொருள்கள்;

  1. நாட்டு கோழி கறி - 1/2 கிலோ.
  2. முந்திரி குருணை  - 50 கிராம்.
  3. சீரகத்தூள் - 1 ஸ்பூன்.
  4. மல்லி தூள் - 2 ஸ்பூன்.
  5. மஞ்சள் தூள் - 2 ஸ்பூன்.
  6. பூண்டு  - 50 கிராம்.
  7. சின்ன வெங்காயம் - 100 கிராம்.
  8. வெந்தயம் - சிறுதளவு .
  9. தக்காளி - 2.
  10. நல்லெண்ணெய் - 50 மில்லி.
  11. கடுகு  - சிறிதளவு.
  12. மிளகாய் தூள் – 2  ஸ்பூன்.
  13. மிளகாய் வத்தல் 10.
  14. புளி - சிறிதளவு.
  15. உருளை கிழங்கு - 2.
  16. கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு.
  17. உப்பு  -  தேவையான அளவு.

 

Method: 

 

செய்முறை ;

  1. அடுப்பில் குக்கர் வைத்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த நாட்டு கோழியை போடவும்.
  2. இதில் மஞ்சள் தூள்  ஒரு ஸ்பூன்,மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விட்டு,4 விசில் வரும் வரை குக்கரை முடி வேக விடவும்.
  3. அடுப்பில் குக்கர் வைத்து ½ லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் இரண்டு உருளை கிழங்கை போட்டு 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்து தோல் உரித்து மிக்சி  ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் வைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிதளவு புளியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து புளிக்கரைசலை தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  5. மிக்சி  ஜாரில் 1/4 கிலோ சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  6. மிக்சியில் 50 கிராம் பூண்டை போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  7. மிக்சி  ஜாரில்  50 கிராம் முந்திரிக்குருணையை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  8. அடுப்பில் குக்கர் வைத்து 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றவும்,எண்ணெய் சூடானவுடன்   சிறிதளவு கடுகு, சிறிதளவு வெந்தயம், சிறிதளவு கறிவேப்பிலை, 10 மிளகாய் வத்தல் போட்டு வதக்கவும்.
  9. இதனுடன் மிக்சியில் அரைத்து வைத்த சின்ன வெங்காய  விழுதை போட்டு வதக்கவும்.
  10. பொடியாக நறுக்கிய ஒரு தக்காளியை போட்டு வதக்கவும்.
  11. மிக்சியில் அரைத்து வைத்த இஞ்சி ,பூண்டு விழுது 1 ஸ்பூன் போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
  12. வேக வைத்த நாட்டு கோழி கறி 1/2 கிலோ போட்டு  இதனுடன் வேக வைத்த தண்ணீர் சிறிதளவு ஊற்றி வதக்கவும்.
  13. இதனுடன் மிக்சியில் அரைத்து வைத்த முந்திரிக்குருணையை போட்டு வதக்கவும்.
  14. வேக வைத்து நன்றாக அரைத்து வைத்த இரண்டு உருளை கிழங்கை போட்டு கலந்து விடவும்.
  15. கரைத்து வைத்துள்ள புளி கரைசல் 5 ஸ்பூன் ஊற்றி தேவையான அளவு உப்பு  போட்டு கலந்து விடவும்.
  16. 5 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.
  17. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  18. சுவையான செட்டிநாடு நாட்டுக்கோழி கிரேவி ரெடி.   

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்