எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர், கடலூரில் தே.மு.தி.க. உரிமை மீட்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் கூட்டணி குறிதது அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பாசார் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் தே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி, சிறப்புரையாற்றுகிறார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நடக்கும், இந்த மாநாட்டில் தே.மு.தி.க. கூட்டணி குறித்து அறிவிக்க வாய்ப்பு உள்ளதால், இந்த மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநாட்டிற்காக கடந்த டிசம்பர் மாதம் பந்தக்கால் நடப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக சுமார் 150 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது மாநாட்டு திடலில் மேடை அமைக்கும் பணி, சாலையின் இருபுறமும் கட்சி தோரணங்கள், பதாகைகள் வைக்கும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் பாசார் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் நிகழ்ச்சியில் பிற்பகல் 2.30 மணிக்கு பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாநாட்டு திடலில் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.
தொடர்ந்து 3.23 மணிக்கு பரதநாட்டியம், கேப்டனை பற்றிய கதை, 3.40 மணிக்கு பட்டிமன்றம், மாலை 4.40 மணிக்கு கலைக்குழுவினரின் நடனம், பரத நாட்டிய குழுவினரின் நிகழ்ச்சி, கிராமிய கலைக்குழு நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த மாநாட்டில் தே.மு.தி.க. தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


