முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பருத்திப்பால்

Cooking time in minutes: 
30
Ingredients: 

பருத்திப்பால் செய்யத் தேவையான பொருள்கள்; 

  1. பருத்தி விதை - 1 கப்.
  2. பச்சரிசி - 1/2 கப்.
  3. வெல்லம் - 1/2 கப்.    
  4. பொடி செய்த ஏலக்காய் - 5.
  5. சுக்கு பொடி - 2 ஸ்பூன்.
  6. தேங்காய் துருவல் - 1/2 மூடி.
  7. உப்பு - 1 சிட்டிகை.
Method: 

செய்முறை ;

  1. ஒரு பாத்திரத்தில் 1/2 கப் பச்சரிசியை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் ஒரு  கப் பருத்தி விதையை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
  3. 1/2 மூடி தேங்காய்யை துருவி தேங்காய் துருவலை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  4. ஊற வைத்து சுத்தம் செய்த 1/2 கப் பச்சரிசியை மிக்சி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை கரைத்து வைத்துக்கொள்ளவும்.
  5. ஊற வைத்து சுத்தம் செய்த ஒரு கப் பருத்தி விதையை மிக்சி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி பருத்திபாலை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில்  கடாய் வைத்து  கரைத்து வைத்துள்ள பச்சரிசிமாவை ஊற்றி கட்டி காட்டாமல் நன்கு கிளறி விட்டு கெட்டியாக வரும் வரை மாவை வேக வைக்கவும்.
  7. இதனுடன் தயார் செய்து வைத்துள்ள பருத்திபாலை ஊற்றி கட்டி காட்டாமல் நன்கு கிளறிவிட்டு 5 நிமிடம் பாலை நன்கு வேக வைக்கவும்.
  8. பருத்திப்பால் கெட்டியாக வந்த உடன் ஒரு  சிட்டிகை உப்பு,1/2 கப் வெல்லம்,2 ஸ்பூன் சுக்கு பொடி, மற்றும் ஏலக்காய் பொடியை போட்டு கலந்து விட்டு 2 நிமிடம் வேக வைக்கவும்.
  9. 1/2 மூடி தேங்காய் துருவலை போட்டு கலந்து விடவும்.
  10. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  11. சுவையான பருத்திப்பால் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்