முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யா செல்கிறார் பாக். பிரதமர்

வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2026      உலகம்
Pak 2024-02-14

லாகூர், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் ரஷ்யாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையில் மோதல்கள் வெடித்துள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் அடுத்த வாரம் ரஷ்யாவுக்குச் செல்வதாக, பாகிஸ்தான் செனட்டின் பாதுகாப்புக் குழு தலைவர் முஷாஹித் ஹுசைன் சையத் தெரிவித்துள்ளார். இந்தப் பயணத்தில், மாஸ்கோ செல்லும் பிரதமர் ஷரீஃப் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினை நேரில் சந்தித்து உரையாடுவார் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து ரஷ்ய அரசின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

ஏற்கெனவே, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் மோதல்கள் வெடித்துள்ளதால், இருநாடுகளும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டுமென ரஷ்ய அரசு வெள்ளிக்கிழமை (பிப். 27) வலியுறுத்தியுள்ளது. இதனால், இந்த விவகாரம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக பிரதமர் ஷரீஃப் மாஸ்கோ செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, 6 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2022 பிப். 24 அன்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசு முறைப் பயணமாக ரஷ்யா சென்றிருந்தார். அன்றுதான் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து