எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி, சி.பி.ஐ. வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டப் பின் முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கதறி அழுத சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் குறித்த சி.பி.ஐ. வழக்கிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்பட 23 பேரை விடுவித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசுத் தரப்பில் எந்தஆதாரமும் இல்லாமல் அவர்களை சிறையில் வைத்ததாக சிபிஐக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமனறம் கண்டனம் தெரிவித்துள்ளது.
வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சந்திரசேகர ராவின் மகள் கவிதா உள்ளிட்ட 23 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். மதுபான கொள்கையில் எந்தவிதமான சதித்திட்டமோ அல்லது குற்றவியல் நோக்கமோ இல்லை என நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
சி.பி.ஐ. வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டப் பின் முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கதறி அழுதார். நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், கலால் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி மற்றும் நாங்கள் நேர்மையானவரகள் என டெல்லி நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியை முடக்க பிரதமர் மோடி அமித் ஷா சதித்திட்டம் திட்டினர். ஆனால் உண்ணை வெளியே வந்துள்ளது. கலால் வழக்கில் நாங்கள் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி நீதிமன்றத் தீர்ப்பு நான் நிரபராதி என்பதற்கு ஆதாரம். உண்மை வெல்லும். அரசியலமைப்பைக் கேலிப் பொருளாக்க வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார். ஊழல், வேலையின்மை, சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க பா.ஜ.க. முயல்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் தேவை என்றும், ஆதாரமின்றி இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது என்றும் டெல்லி நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


