முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ராஜ்மா கிரேவி

Cooking time in minutes: 
20
Ingredients: 

ராஜ்மா கிரேவி செய்யத்தேவையான பொருட்கள்.

  1. ராஜ்மா - 1/4  கிலோ.
  2. பொடியாக  நறுக்கிய தக்காளி – 6.
  3. முந்திரி பருப்பு – 25 கிராம்.
  4. அன்னாசிபூ - 1.
  5. சோம்பு - 1/2 ஸ்பூன்.
  6. பிரியாணி இலை - 2.
  7. பொடியாக  நறுக்கிய இஞ்சி -1 துண்டு.
  8. பொடியாக நறுக்கிய வெள்ளை பூண்டு - 4  பல்.
  9. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்  - 2.
  10. சீரகத்தூள் – 1 டீஸ்பூன்.
  11. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்.
  12. மல்லி தூள் - 2 டீஸ்பூன்.
  13. மிளகாய் தூள்   - 2 டீஸ்பூன்.
  14. கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்.
  15. எலுமிச்சம் பழம் - 1/2 மூடி.
  16. மல்லி -  சிறிதளவு.
  17. எண்ணெய் - சிறிதளவு.
  18. உப்பு தேவையான - அளவு.

 

Method: 

செய்முறை ;--

 

  1. அடுப்பில் குக்கரை வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்த 1/4 கிலோ ராஜ்மாவை போட்டு 4 விசில் வரும் வரை நன்றாக வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. மிக்சி ஜாரில் பொடியாக  நறுக்கிய 6 தக்காளியை போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  3. மிக்சி ஜாரில் 25 கிராம் முந்திரி பருப்பை போட்டு சிறிதளவு தண்ணீர்  ஊற்றி நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு  எண்ணெய்யை ஊற்றவும்.
  5. எண்ணெய்  சூடானவுடன் ஒரு அன்னாசிபூ,1/2 ஸ்பூன் சோம்பு,2 பிரியாணி இலையை போட்டு வதக்கவும்.  
  6. இதனுடன் பொடியாக  நறுக்கிய இஞ்சி ஒரு துண்டு,பொடியாக நறுக்கிய 4  பல் வெள்ளை பூண்டு,பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய்,சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்,மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்,மல்லி தூள் 2 டீஸ்பூன்,மிளகாய் தூள் 2 டீஸ்பூன் போட்டு வதக்கவும்.  
  7. இதனுடன் மிக்சி ஜாரில் அரைத்த தக்காளி விழுதை ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு  கிளறி விடவும்.
  8. இதனுடன் கரம் மசாலா தூள்  ஒரு ஸ்பூன் போட்டு,வேக வைத்த ராஜ்மாவை போட்டு கிளறி விடவும்.
  9. இதனுடன் 1/2 மூடி எழுமிச்சம்பழ சாறை ஊற்றி கலந்து விட்டு கடாயை மூடி போட்டு மூடி 5 நிமிடங்கள் நன்றாக வேக வைக்கவும்.
  10. 5 நிமிடங்கள் கழித்து முடியை திறந்து கலந்து விட்டு மிக்சி ஜாரில் அரைத்து வைத்துள்ள 25 கிராம் முந்திரி பருப்பு விழுதை ஊற்றி கலந்து விடவும்.
  11. பொடியாக நறுக்கிய சிறிதளவு மல்லி இலையை போட்டு கலந்து விடவும்.
  12. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  13. சுவையான ராஜ்மா கிரேவிரெடி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்