முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் நானோ தொழில்நுட்ப மாநாடு: போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2025      தமிழகம்
VIT-COLLEGE

வேலூர், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆகியோர் பங்கேற்றனர்.

நானோ தொழில்நுட்ப மாநாடு வேலூர்  வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப 4 நாள் மாநாடு தொடக்க விழா நேற்று நடந்தது.  விழாவிற்கு வி.ஐ.டி வேந்தர் ஜி. விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது;-  நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாட்டில் 20 நாடுகளில் இருந்தும், 42 சர்வதேச கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் உள்பட 300 பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் மேம்பட்ட நானோ பொருட்கள், நானோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் குவாண்டம் பொருட்கள், நானோ மருத்துவம், சென்சார்கள் மற்றும் பயோசென்சார்கள், ஆற்றல் பொருட்கள் மற்றும் நிலையான தொழில்நுட்ப பயன்பாடுகள் உள்பட பல தலைப்புகளை உள்ளடக்கியது.  மாநாட்டின் சிறப்பம்சமாக, ஆராய்ச்சியில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 

அண்மையில் வெளியான க்யூ.எஸ். நிலைத்தன்மை பிரிவில் தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் வி.ஐ.டி பல்கலைகழகம் 7-ம் இடமும், உலகளவில்  352-ம் இடமும் பிடித்துள்ளது. இந்த தரவரிசையில் உயர வேண்டும் என்பது இலக்காகக் கொண்டுள்ளோம். ஒரு நாடு முன்னேறிய நாடாக மாற வேண்டுமானால் உயர்கல்வியால் மட்டுமே முடியும். மத்திய, மாநில அரசுகள் கல்வியை முன்னுரிமையாக கொள்ள வேண்டும். சுகாதாரமும், கல்வியும் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

சிறப்பு விருந்தினராக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-  நானோ தொழில்நுட்பம் வெறும் அறிவியல் துறை அல்ல. அது ஒரு புரட்சியாகும்.  இந்த தொழில்நுட்பம் உலகின் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளப் பொருள்களை வடிவமைக்க உதவுகிறது. நானோ தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் நாடுகள் வரும்கால தொழில்துறையில் முன்னிலை வகிக்கும். திராவிட மாடல் அரசு சமூக நீதியைப் பொருளாதார வளர்ச்சியுடன் இணைக்கிறது. உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டை மாற்றி அமைத்துள்ளது.  

சமூக நீதி, உள்ளடக்கம் மற்றும் மனித மூலதன வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து, தமிழ்நாட்டை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2-ம் இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பொருளாதார வளர்ச்சி உள்ளடக்கமானதாகவும் அறிவு சார்ந்ததாகவும் இருந்தாலே நிலையானது. இந்திய உயர்கல்வி 2020-21 ஆய்வின்படி ஆராய்ச்சி படிப்பை படிக்கும் முனைவர்களில் 15,400 மாணவிகளும், 13,457 ஆண்களும் என மொத்தம் 28,857 பேர் அடங்குவர்.  திராவிட மாடல் அரசு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தும். நானோ தொழில்நுட்பமானது திறன்மிகு பேட்டரிகள், நீடித்த சூரிய தொழில்நுட்பங்கள், அடுத்த தலைமுறை ஹைட்ரஜன் அமைப்புகளுக்கு முக்கிய பங்காற்றும். இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் வி.ஐ.டி. துணைத்தலைவர் சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டரெட்டி, துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நானோ அறிவியல் மையத்தின் இயக்குநர் நிர்மலா கிரேஸ் வரவேற்றார். முடிவில் பேராசிரியை விமலா நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து