முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோர்டான் பட்டத்து இளவரசருடன் காரில் பயணம் செய்த பிரதமர் மோடி

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2025      இந்தியா
Modi-1-2025-12-16

புதுடெல்லி, ஜோர்டான் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பட்டத்து இளவரசர் பின் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லா அருட்காட்சியகத்திற்கு ஒரே காரில் அழைத்து சென்றார்.

பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் ஜோர்டான் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கே வந்து, ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹசன் வரவேற்றார். தொடர்ந்து பிரதமர் மோடி ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

பின்னர் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவை , அவரது அரண்மனையில் சந்தித்து பேசியிருந்தார். இந்நிலையில், நேற்று பிரதமர் மோடியை, அந்நாட்டு பட்டத்து இளவரசர் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லாவை அருட்காட்சியகத்திற்கு காரில் அழைத்து சென்றார். பிரதமர் மோடியும் ஜோர்டான் பட்டத்து இளவரசரும் ஒரே காரில் பயணித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பிரதமர் மோடி தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு எத்தியோப்பியா புறப்பட்டார். அப்போதும், விமான நிலையம் வரை காரை தானே ஒட்டி வந்த ஜோர்டான் பட்டத்து இளவரசர், மோடியை வழியனுப்பி வைத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து