முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வரகு அரிசி புளியோதரை

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

வரகு அரிசி புளியோதரை செய்யத் தேவையான பொருட்கள். 

  1. வரகு அரிசி - 1/2 கிலோ.
  2. மல்லி - ஒரு ஸ்பூன்.
  3. வெந்தயம் - ஒரு ஸ்பூன்.
  4. எள்ளு – 2 ஸ்பூன்.
  5. கடலை பருப்பு  - ஒரு ஸ்பூன்.
  6. உளுந்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்.
  7. கடுகு - ஒரு ஸ்பூன்.
  8. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1.
  9. நறுக்கிய மிளகாய் வத்தல் - 1
  10. நிலக்கடலை - 3 ஸ்பூன்.
  11. கறிவேப்பிலை - 10.
  12. மிளகு தூள் - ஒரு சிட்டிகை.
  13. பெருங்காயத்தூள் - சிறிதளவு.
  14. புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு.
  15. மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன்.
  16. எண்ணெய் - 3 ஸ்பூன்.
  17. உப்பு -தேவையான அளவு.

 

Method: 

 

செய்முறை ;--

  1. அடுப்பில் குக்கரை வைத்து 1/2 கிலோ வரகு அரிசியை போட்டு, 3 கப்  தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் வரும் வரை நன்றாக வேக   வைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து  ஒரு ஸ்பூன் மல்லியை போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து  ஒரு ஸ்பூன் வெந்தயத்தை போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து  ஒரு ஸ்பூன் எள்ளை போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. ஒரு மிக்சி ஜாரில் வறுத்து வைத்துள்ள மல்லி,வெந்தயம்,எள்ளு ஆகியவற்றை போட்டு நன்றாக  அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.
  7. எண்ணெய் சூடானவுடன் ஒரு ஸ்பூன் உளுந்தம் பருப்பு,கடுகு ஒரு ஸ்பூன்,பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய்,நறுக்கிய  ஒரு மிளகாய் வத்தல்,நிலக்கடலை  3 ஸ்பூன் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
  8. இதனுடன் 10 கறிவேப்பிலை,மிளகு தூள் ஒரு சிட்டிகை,பெருங்காயத்தூள் சிறிதளவு போட்டு வதக்கவும்.
  9. ஒரு எலுமிச்சம் பழ அளவு புளியை எடுத்து புளி கரைசலை தயார் செய்து ஊற்றி நன்றாக கலந்து விட்வும்.
  10. மிக்சி ஜாரில் அரைத்த மசாலா கலவையை போட்டு கலந்து விட்வும்.
  11. இதனுடன் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கொதிக்க வைத்து அடுப்பில் இருந்து இறக்கி  வைத்துக்கொள்ளவும்
  12. ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வரகு அரிசி சாதத்தை எடுத்து அதில் தயார் செய்து வைத்துள்ள புளிக்கரைல் மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி கலந்து விடவும்.
  13. ஒரு ஸ்பூன் எள்ளை போட்டு கலந்து விடவும்.
  14. சுவையான வரகு அரிசி புளியோதரை ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்