முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வெண்பொங்கல் உருண்டை குழம்பு

Cooking time in minutes: 
30
Ingredients: 

வெண்பொங்கல் உருண்டை குழம்பு செய்யத் தேவையான பொருள்கள்;

 

  1. அரிசி - 1 கப்.
  2. பாசிப்பருப்பு - 50 கிராம்.
  3. மிளகு,சீரகம் - 1 ஸ்பூன்.
  4. முந்திரி பருப்பு தூள் - 2 ஸ்பூன்.
  5. அரிசிமாவு - 2 ஸ்பூன்.
  6. நெய் - 2 ஸ்பூன்.  
  7. கடுகு - 1 ஸ்பூன்.
  8. சோம்பு - 1/2 ஸ்பூன்.
  9. பூண்டு - 10 பல்.
  10. பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 20.
  11. மிளகாய் தூள் - 1 ஸ்பூன். 
  12. மஞ்சள்தூள் -  1/2 ஸ்பூன்.
  13. மல்லித்தூள் - 3 ஸ்பூன்.
  14. புளி – சிறிதளவு.
  15. கருவேப்பிள்ளை - சிறிதளவு.
  16. எண்ணெய் – 8 ஸ்பூன். 
  17. உப்பு - தேவையான அளவு.

 

Method: 

செய்முறை ;

  1. ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் அளவு புளியை போட்டு  தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து ஒரு கப் புளிக் கரைசலை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். 
  2. அடுப்பில் குக்கரை வைத்து 4 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும், 
  3. எண்ணெய் சூடானவுடன்  1 ஸ்பூன் மிளகு,சீரகம் போட்டு நன்றாக வதக்கவும்.
  4. இதனுடன் சிறிதளவு கருவேப்பிள்ளை,2 ஸ்பூன் முந்திரி பருப்பு தூள் போட்டு வதக்கவும். 
  5. கழுவி சுத்தம் செய்த 1 கப் அரிசி, 50 கிராம் பாசிப்பருப்பு,1 சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு கிளறி விடவும்.
  6. 1 கப் அரிசிக்கு 3 1/2 கப் தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.
  7. குக்கரை மூடி 3 விசில் வரும்வரை வேக விட்டு இறக்கவும்.
  8. முடியை திறந்து பார்க்கலாம், வெண்பொங்கல் தயார் ஆகிவிட்டது, இதில் 2 ஸ்பூன் நெய் மற்றும் 2 ஸ்பூன் அரிசி மாவு போட்டு கலந்து விட்டு வெண்பொங்கலை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  9. அடுப்பில் கடாய் வைத்து 4 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.
  10. எண்ணெய் சூடானவுடன் 1 ஸ்பூன் கடுகு உளுந்து,1/2 ஸ்பூன் சோம்பு, 10 பல் பூண்டு மற்றும் சிறிதளவு கருவேப்பிள்ளையை போட்டு நன்றாக வதக்கவும்.
  11. பொடியாக நறுக்கிய 20 சின்ன வெங்காயத்தை  போட்டு நன்றாக வதக்கவும்.
  12. இதனுடன்  1 ஸ்பூன் மிளகாய் தூள்,1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்,3 ஸ்பூன் மல்லித்தூள் போட்டு கிளறி விடவும்.
  13. இதனுடன் கரைத்து வைத்துள்ள 1 கப் புளி கரைசலையும் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு, 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு,10 நிமிடம் கடாய்யை மூடி போட்டு மூடி வேக விடவும்.
  14. 10 நிமிடம் ஆகிவிட்டது,மூடியை திறந்து பார்க்கலாம்,குழம்பு நன்றாக கொதிக்கிறது இப்போது தயார் செய்து வைத்துள்ள வெண்பொங்கல் உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு கலந்து விட்டு 5 நிமிடம் கடாய்யை மூடி வேக விடவும்.
  15. சிறிதளவு கறிவேப்பிலையை போட்டு இறக்கவும்.
  16. சுவையான வெண்பொங்கல் உருண்டை குழம்பு ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago