முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தலைவலிக்கு உடனடி தீர்வு

 

  1. தலைவலி என்பது ஒரு நோய் அல்ல, ஒரு நோய்யின் அறிகுறி ஆகும்.
  2. மலச்சிக்கல், செரிமானக்கோளாறு,மற்றும் திரும்ப,திரும்ப ஒரே விஷயத்தை சிந்தனை செய்தால் தலைவலி வரும். 
  3. மனஅழுத்தம் காரணமாக ஏற்படும் தூக்கமின்மை காரணமாகவும் தலைவலி வருகிறது.
  4. தொடர் பயணம் மற்றும் மழையில் நனைதல் காரணமாகவும் தலைவலி வரலாம்.
  5. காய்ச்சல் காரணமாக நமது உடலில் ஏற்படும் அதிக உஷ்ணத்தால் தலைவலி வரும்.
  6. அதிக உடல் உழைப்பு மற்றும் மனஅழுத்தம் ஏற்படும்படி பேசினாலும்,பேசுவதை கேட்டாலும் தலைவலி வரலாம்.
  7. தலையின் பின்புறம் ஏற்படும் தலைவலி,நெற்றியில் ஏற்படும் தலைவலி,நெற்றிபொட்டில் ஆரம்பித்து தலையின் நடுப்பகுதி வரை ஏற்படும் தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி என நான்கு வகைப்படும். 
  8. தலைவலிக்கு சித்த வைத்தியத்தில் மிக எளிய மருத்துவம் உள்ளது.
  9. ஒரு வெற்றிலையில் சிறிதளவு மிளகு மற்றும் சிறிதளவு சீரகம் வைத்து நன்கு மென்று சாப்பிட்டு பின்னர் ஒரு டம்ளர் சூடு நீர் அருந்த தலைவலி குணமாகும்.
  10. காய்ச்சல் அறிகுறி உடன் வரும் தலைவலிக்கு ஒரு வெற்றிலை, சிறிதளவு மிளகு மற்றும் சிறிதளவு சீரகம் எடுத்து அதை நன்கு மை போல் அரைத்து தலையில் பற்றுப்போட தலைவலி குணமாகும் .
  11. மூக்கு அடைத்து தலைவலி வந்தால் ஒரு விராலி மஞ்சளை எடுத்து விளக்கெண்ணெய்யில் முக்கி எடுத்து அதை சுட்டு வரும் புகையை நுகர தலைவலி குறையும்
  12. ,(இந்த  மருத்துவ முறையை குழந்தைகளுக்கு செய்யக்கூடாது,குழந்தைகளுக்கு வெற்றிலையில் மிளகு மற்றும் சீரகம் வைத்து நன்கு மென்று சாப்பிட்டு பின்னர் ஒரு டம்ளர் சூடு நீர் அருந்தும் மருத்துவ முறை மட்டுமே போதுமானது  தலைவலி குணமாகும்)
  13. செரிமானக்கோளாறு காரணமாக ஏற்படும் ஒற்றை தலைவலி வாந்தி எடுத்தால் குணமாகும்.
  14. டென்ஷன் மற்றும் படபடப்பு மூலம் வரும் தலைவலிக்கு தூக்கம் மட்டுமே போதுமானது.
  15. ஆழ்ந்த உறக்கம்,உடல் தளர்வு மற்றும் மனத்தளர்வு ஆகியவற்றை நமது வாழ்வில் கடை பிடித்தால் தலைவலி வர வாய்ப்பு குறைவு.
  16. முச்சு பயிற்சி செய்வதன் மூலம் மனஅழுத்தம் குறைந்து டென்ஷன் மற்றும் படபடப்பு மூலம் வரும் தலைவலி உட்பட பல்வேறு நோய்கள் குணமாகும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்