முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் காங். செயல் தலைவராக ஹர்திக் படேல் நியமனம்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றி வந்த ஹர்திக் படேல் குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

குஜராத்தில் படேல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு கேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி தேசிய அளவில் கவனம் பெற்றவர் ஹர்திக் படேல் (வயது 26). இவர் கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், அந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரங்களை மேற்கொண்டார். 

காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றி வந்த ஹர்திக் படேல் குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை காங்கிரஸ் தலைவர் சோனியா வழங்கியதாகவும், இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கட்சியின் தேசிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து