முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவுடன் ராணுவக் கூட்டணி: ரஷ்ய அதிபர் புடின் கருத்து

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

மாஸ்கோ : சீனா மற்றும் ரஷ்யா இடையே ராணுவ ரீதியிலான உறவு உள்ளது, இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் கூட்டணி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான சீனா மற்றும் ரஷ்யாவின் உறவுகள் பதற்றமாக இருக்கும் நிலையில் சீனாவும் ரஷ்யாவும் அதிக நெருக்கம் காட்டி வருகின்றன. அணு ஆயுதங்கள் வைத்திருப்பது தொடர்பாக, அமெரிக்காவுடனான ரஷ்யாவின் ஒப்பந்தம் அடுத்தாண்டு முடிய உள்ளது. இதை புதுப்பிப்பது தொடர்பாக, அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், குறித்த ஒப்பந்தத்தை நீட்டிப்பது தொடர்பாக, இரு நாடுகளும் பேசி வருகின்றன. இந்த நிலையில், பல நாடுகளைச் சேர்ந்த, வெளியுறவுத்துறை கொள்கை நிபுணர்களுடன், காணொளி முறையில் ரஷ்ய அதிபர் புடின் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், சீனா மற்றும் ரஷ்யா இடையே ராணுவ ரீதியிலான உறவு உள்ளது.

சீன ராணுவத்தின் வலிமையை அதிகரிக்க, அது உதவி உள்ளது.அதே நேரத்தில், சீனாவுடன் ராணுவக் கூட்டணி வைப்பதற்கு, தற்போதைய நிலையில் தேவையில்லை.

ஆனால், எதிர்காலத்தில் கூட்டணி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது.அணு ஆயுதம் தொடர்பாக, அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்புகிறோம்.

ஆனால், அதில் இறுதி முடிவை அமெரிக்கா தான் எடுக்க வேண்டும். ரஷ்ய அதிபரின் இந்த திடீர் அறிவிப்பு, சர்வதேச அரசியல் அரங்கில் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து