முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த மு.க. அழகிரி

வியாழக்கிழமை, 6 மே 2021      தமிழகம்
Image Unavailable

எனது தம்பியான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். நிச்சயம் அவர் நல்லாட்சி தருவார் என்று மு.க.அழகிரி கூறி உள்ளார்.

ஸ்டாலின் எந்த நாளும் முதல்வராகும் வாய்ப்பில்லை எனப் பேட்டி அளித்திருந்த மு.க. அழகிரி, திடீரென என் தம்பி முதல்வராவதில் எனக்குப் பெருமை என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வில் கருணாநிதியின் மகன்கள் மு.க.அழகிரி, ஸ்டாலின், மகள் கனிமொழி நேரடி அரசியலில் உள்ளனர். மதுரையில் 1980-களில் சென்று குடியேறிய மு.க.அழகிரி அங்கு செல்வாக்கு மிக்கவராக இருந்தார். பின்னர் தி.மு.க.வின் தென்மண்டல அமைப்புச் செயலாளராகப் பதவி வகித்தார். தென் மாவட்டங்களில் தி.மு.க. வெற்றிக்குக் காரணமாக இருந்தார். 

இந்த நிலையில் நேற்று மு.க.அழகிரி தனது தம்பி ஸ்டாலின் முதல்வராவதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

முதல்வராக உள்ள ஸ்டாலினைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன். என் தம்பி முதல்வராவதில் பெருமை. எனது தம்பியான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். அழகிரியின் வாழ்த்து மூலம் தி.மு.க.வில் அழகிரி, ஸ்டாலின் இடையே மீண்டும் இணக்கம் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து