முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதித்தவர்களுக்கு உதவ 2 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை நாட்டிற்கு வழங்குகிறது ' பி.சி.சி.ஐ '

திங்கட்கிழமை, 24 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 10 லிட்டர் திறன் கொண்ட 2 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்க பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

மிகவும் தீவிரமாக... 

இந்தியாவில் 2-வது அலையால் பாதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் மிக இன்றியமையாததாக உள்ளதால் மற்ற நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டின. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மிகவும் தீவிரமாக இருந்து வருகிறது. 2-வது வாரத்திற்குப் பிறகு இந்தியாவில் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தண்டியது. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடு மிக அதிக அளவில் ஏற்பட்டது.

ஆக்சிஜன் செறிவூட்டி...

இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்பட ஏராளமான நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன் தொடர்பான உபகரணங்கள் வழங்கி உதவி செய்தன. இந்த நிலையில் பி.சி.சி.ஐ 10 லிட்டர் கொள்ளவு கொண்ட 2000 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குகிறது.

கிரிக்கெட் வீரர்கள்...

அடுத்த சில மாதங்களில் பி.சி.சி.ஐ நாட்டின் எல்லா பகுதிகளுக்கும், தேவையிருக்கும் இடத்திற்கு இதை வழங்க இருக்கிறது. ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரிஷப் பண்ட், தவான், இர்பான் பதான், பாண்ட்யா சகோதரர்கள் போன்ற கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவிற்கு உதவியுள்ளனர்.

பி.சி.சி.ஐ துணை நிற்கும் 

இது குறித்து பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில் " கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் மருத்துவத்துறைக்கு துணை நிற்கும் முயற்சியில் பி.சி.சி.ஐ ஈடுபட்டுள்ளது. இந்தக் கடினமான காலக்கட்டத்தில் தேசத்துடன் துணை நிற்கும் விதமாக ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களுக்கு உதவும். அதன்படி 10 லிட்டர் திறன் கொண்ட 2 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை பி.சி.சி.ஐ வழங்கும்" என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து