முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் அரசியல் குழப்பம் ஏதும் இல்லை: முதல்வர் எடியூரப்பா திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 18 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : கர்நாடகாவில் அரசியல் குழப்பம் ஏதும் இல்லை என அம்மாநில முதல்வர் எடியூரப்பா கூறி உள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. எடியூரப்பா எதிர்ப்பாளர்கள், விரைவில் முதல்வர் மாற்றம் செய்யப்படுவார் என பேசி வருகின்றனர்.  இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது: 

கர்நாடகாவில் எந்த அரசியல் குழப்பமும் இல்லை. ஒரு சிலர் மீடியாவில் முன்னிலைப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக ஏதேதோ கூறி வருகின்றனர். ஆரம்பம் முதலே, அவர்கள் இதனை செய்து வருகின்றனர். அவர்களை, கட்சி மேலிட பொறுப்பாளர் சந்திக்கவில்லை. இதனால், எந்த குழப்பமும் இல்லை. அமைச்சர்களுக்கு எந்த குழப்பமும் இல்லை.

ஏதேனும் பிரச்னை இருந்தால், அது குறித்து பேசி தீர்க்கப்படும். பா.ஜ.க. எம்.எல்.சி. விஸ்வநாத்தின் கருத்து குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து