முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் டெல்டா வைரஸ்

புதன்கிழமை, 21 ஜூலை 2021      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க் : அமெரிக்காவில் பதிவாகும் கொரோனா தொற்றுகளில் 80சதவீதத்திற்கும் மேல் டெல்டா வைரஸால் ஏற்படுவதாக அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆண்டனி ஃபாஸி கூறியபோது அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக பதிவு செய்யப்படும் கரோனா தொற்றுகளில் 80சதவீதத்திற்கும்  மேல் டெல்டா வைரஸால் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தடுப்பூசி காரணமாக அதிகமான நபர்கள் மருத்துவமனைகளில் வந்து அனுமதிக்கப்படுவது குறைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா வைரஸ் மிக மோசமான வைரஸ் என்பது தெளிவாகிறது. ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்று பரவுவதை டெல்டா வைரஸ் அதிகப்படுத்தியுள்ளது. டெல்டா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா சிறப்பாகச் செயல்படுகிறது . அமெரிக்காவில் சில இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் வேகம் குறைந்துள்ளது. அதனை அதிகரிக்க வேண்டும் என்று ஃபாஸி முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் தடுப்பூசி இலக்கு எட்டப்படாமல் இருப்பதற்கு சமூக ஊடகங்களே காரணம் என்று அமெரிக்க அரசு கூறியிருந்தது.

அமெரிக்காவில் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து