முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் புதிதாக 11,919 பேருக்கு கொரோனா தொற்று

வியாழக்கிழமை, 18 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் புதிதாக 11,919 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் கேரளாவில் 388 பேர் உள்பட நாடு முழுவதும் 470 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,64,623 ஆக உயர்ந்தது.

நாட்டில் மேலும் 11,919 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 15-ம் தேதி பாதிப்பு 8,865 ஆக இருந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் 10,197 ஆக உயர்ந்தது. இந்நிலையில் பரிசோதனை அதிகரித்ததன் காரணமாக நேற்று முன்தினம் சற்று உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 6,849 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது நாடு முழுவதுமான பாதிப்பில் சுமார் 57 சதவீதம் ஆகும். இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 44 லட்சத்து 78 ஆயிரத்து 517 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 388 பேர் உள்பட நேற்று நாடு முழுவதும் 470 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,64,623 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து 11,242 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 85 ஆயிரத்து 132 ஆக உயர்ந்தது. தற்போது 1,28,762 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் 73,44,739 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 114 கோடியே 46 லட்சத்தை கடந்துள்ளது. நாட்டில் இதுவரை 62.82 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 12,32,505 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து