முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கருக்கு பின் ஆர்.ஜே.பாலாஜி – சத்யராஜ் புகழாரம்

திங்கட்கிழமை, 13 ஜூன் 2022      சினிமா
Sathyaraj 2022 06 13

Source: provided

ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள வீட்ல விசேஷம் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், சத்யராஜ், ஊர்வசி, தயாரிப்பாளர் போனி கபூர்  உள்ளிட்ட படகுழுவினர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், பாகு பலியில் நடித்த பிறகு பழைய சத்யராஜை மீட்டு எடுக்க யாரும் வரவில்லை எனக் காத்திருந்தேன். அப்போது தான் ஆர்.ஜே பாலாஜி வந்தார் எனக் குறிப்பிட்டுப் பேசிய அவர், பாலாஜி என்னை எல்கேஜி படத்திற்கு நடிக்கக் கேட்டார். ஆனால், எனக்கு அந்த கதாபாத்திரம் பிடிக்கவில்லை என நான் நடிக்க மறுத்துவிட்டேன் எனத் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, வீட்ல விசேஷம் படத்தில் நடிக்கக் கேட்டார் என்றார். பொதுவாகக் கலைஞர்களுக்கு ஒரு திமிர் இருக்கும், நான் கூப்பிட்டு நீ வர மாட்டேன் என்று சொல்கிறாயா? என.., ஆனால் அந்த ஈகோ இல்லாதவர் ஆர்.ஜே பாலாஜி எனகூறிய அவர், இயக்குநர் சங்கருக்குப் பிறகு இதைத் தான் ஆர்.ஜே பாலாஜியிடம் தான் பார்ப்பதாகக் கூறினார். மேலும், இயக்குநர் சங்கர் சார் ஒரு படத்தில் நடிக்கக் கேட்டுத் தான் நடிக்கவில்லை எனவும், அதன் பிறகு மீண்டும் தன்னை அவர் அழைத்து நண்பன் படத்தில் நடிக்க வைத்ததாகவும் குறிப்பிட்டார். அதனைத்தொடர்ந்து பேசிய ஆர்.ஜே பாலாஜி, இந்த படத்திற்கு நாங்கள் கியாரண்டி படம் நிச்சயம் வெற்றியடையும் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!