முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனல் இசை வெளியீட்டு விழா

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      சினிமா
Kanal-music 2022 07 04

Source: provided

த நைட்டிங்கேல் புரொடக்சன் தயாரிப்பில் சமய முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கனல்’. இப்படத்தில் ஜான் விஜய், கிருஷ்ணன், சுவாதி, ஸ்ரீதர் மாஸ்டர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பிரபல நடிகர் ராதாரவி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.  இந்த விழாவில் நாயகி காவ்யா பெல்லு பேசியதாவது, "கனல் எனக்கு ரொம்ப பிடிச்ச படம். இப்படத்தில் நான் நடித்ததுடன் புரொடக்‌ஷன் வேலையும் செய்திருக்கிறேன். இந்தக் கேரக்டர் நான் பண்றதுக்கு இயக்குநர் என்னைக் கேட்டார். ஆனால், எல்லாருக்கும் டவுட் இருந்தது. இந்தக் கேரக்டரை ரொம்ப சீரியசா எடுத்துட்டுப் பண்ணிணேன். சக்தி என்ற இந்த கேரக்டர் ரொம்ப ஸ்ட்ராங்கான கேரக்டர். தயாரிப்பாளர் ஜெய்பாலா சார் ரொம்ப ஹார்ட் ஒர்க்கர். பாஸ்கர் எக்ஸ்பீரியன்ஸ்ட் கேமராமேன். இயக்குநர் சமயமுரளி மிகத்திறமையானவர். இப்படம் நிச்சயம் வெற்றி பெரும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!