முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவமதிப்பு வழக்கில் இம்ரான்கானுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிப்பு : பாக். தேர்தல் ஆணையம் அதிரடி

புதன்கிழமை, 11 ஜனவரி 2023      உலகம்
Imran-Khan 2023-01-11

Source: provided

இஸ்லாமாபாத் : அவமதிப்பு வழக்கில் இம்ரான்கானுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்த பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டில் தெஹ்ரீக் -இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றார். அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனால் அவரது ஆட்சி கவிழ்ந்து பதவி விலகினார். 

தற்போது பாகிஸ்தான் பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் பதவி வகித்து வருகிறார். இதற்கிடையே, தேர்தல் ஆணையம் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் ராஜாவை இம்ரான் கான் தொடர்ந்து விமர்சித்து வந்தார். 

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் விசாரணைக் குழு இம்ரான் கான் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. விளக்கம் கேட்டு பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை. இந்நிலையில், இம்ரான் கானுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்த தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து