முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீரில் 95 கோடி ரூபாய் மதிப்பில் பணம், மது, போதைப்பொருள் பறிமுதல்

திங்கட்கிழமை, 27 மே 2024      இந்தியா
Kashmir 2024-05-27

Source: provided

ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில்  95 கோடி ரூபாய் மதிப்பில் பணம், மது, போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள், மது உள்ளிட்டவற்றை கொடுப்பதைத் தடுக்க அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள 5 தொகுதிகளிலும் தேர்தல் முடிந்து விட்டது. அங்கு இதுவரை ரூ.95 கோடி மதிப்பிலான ரொக்கம், மது, போதைப்பொருளை பறிமுதல் செய்திருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, “வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை விநியோகம் செய்வதைத் தடுக்க பல்வேறு அரசு அமைப்புகள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன.

இதில் காவல் துறையினர் அதிகபட்சமாக ரூ.90.83 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுபோல வருமான வரித் துறையினர் ரூ.42 லட்சம், கலால் வரி துறையினர் ரூ.1.01 கோடி மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் ரூ.2.32 கோடி மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்” என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து