எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழக மாநில திட்டக்குழு தயாரித்த 4 அறிக்கைகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட, தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள், நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030 - தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம் உள்ளிட்ட 4 அறிக்கைகள் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று (ஜூன் 9) தலைமைச் செயலகத்தில், துணை முதல்வர் மற்றும் மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள், நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030 - தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம், தமிழ்நாட்டில் ஆட்டோமோட்டிவ் (வாகன உற்பத்தி) துறையின் எதிர்காலம், அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி - தமிழ்நாட்டை வடிவமைக்கும் பாதை ஆகிய நான்கு அறிக்கைகளை சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கைகளின் முக்கிய அம்சங்கள்:
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள்: தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் வேளாண் சாரா பணிகளில் தன்மை மற்றும் அளவினை அறிந்து கொள்ளும் முக்கிய நோக்கத்துடன் வேளாண் சாரா வேலைவாய்ப்பு குறித்த ஆய்வு மாநிலத் திட்டக் குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வு தமிழ்நாட்டின் அதிக வேளாண் சாராத பணிகளைக் கொண்டுள்ள மாவட்டங்கள் மற்றும் குறைந்த அளவு வேளாண் சாராத பணிகளைக் கொண்டுள்ள ஆறு மாவட்டங்களிலுள்ள 12 தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், வேளாண் பணிகளிலிருந்து, அதிகளவில் வேறு துறைகளுக்கு மாறும் நிலை காணப்படுகிறது. கட்டடம் மற்றும் உற்பத்தி துறைகள் போன்ற வேளாண்மை சாராத துறைகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது 75%-க்கும் அதிகமான ஆண் தொழிலாளர்கள் மற்றும் 50%-க்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள் வேளாண்மை அல்லாத துறைகளில் வேலை செய்யும் நிலை உள்ளது என்பதை இந்த ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. இது 2012-க்குப் பிறகு வேளாண்மைத் துறையின் சதவீதத்தில், 20% குறைந்துள்ளது என்பதையும் குறிக்கிறது.
இது ஊரக வாழ்வாதாரத்தில் ஏற்பட்ட கட்டமைப்பு மாற்றத்தைக் காட்டுகிறது. இந்த ஆய்வின்படி, 15 முதல் 34 வயதுக்குட்பட்ட இளம் தொழிலாளர்களே இந்த மாற்றத்தின் முக்கிய காரணியாக இருந்து வருகிறார்கள் எனத் தெரியவருகிறது. அதிக ஊதியமும் நிலையான வேலைவாய்ப்புகளும் இளைஞர்களை வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகளுக்கு ஈர்த்துள்ளன. கட்டடத் தொழில் இளைஞர்களிடையே, முதன்மையான துறையாகவும், பெண்களிடையே உற்பத்தித்துறை முக்கிய வேலைவாய்ப்பு துறையாகவும் உருவெடுத்துள்ளது.
நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030- “நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம்” - இது தமிழக அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் சார்பில், மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணம், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள, 2030-ம் ஆண்டுக்கான வளர்ச்சி திட்டமான நீடித்த வளர்ச்சி இலக்குகளின் கீழ் உள்ள 17 இலக்குகள் வாரியாக அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
மேலும், இந்த ஆவணம் பல்வேறு இலக்குகளில் மாநிலத்தின் தற்போதைய நிலை மற்றும் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு நலத்திட்டங்கள், சிறப்பு முயற்சிகள் மற்றும் கொள்கை உருவாக்கங்கள் மூலம் தமிழக அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டுகிறது. இந்த ஆவணம், ஒவ்வொரு இலக்கினை அடைவதற்கான உத்திகள் மற்றும் செயல் திட்டங்களையும் கொண்டுள்ளது.
இந்த அறிக்கை தமிழகத்தின் வாகன உற்பத்தி துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியை விவரிக்கிறது. வாகன உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, காலநிலைக்கு ஏற்ப மற்றும் நிலைத்த தன்மையுடன் கூடிய வலுவான அடித்தளத்தை உருவாக்க உள்ளது என்று இவ்வறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் நிலைத்த வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு உற்பத்தித் துறையில் வளர்ச்சியை ஊக்குவிக்க இவ்வறிக்கை பரிந்துரைக்கிறது. குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையை வலுப்படுத்தல், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. இவ்வறிக்கை, அனைவருக்கும் பயனளிக்கும் ஒருங்கிணைந்த மற்றும் செம்மையான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி, சமூக நீதி மற்றும் அறிவுசார் பரிணாமத்தை ஒருங்கிணைக்கும் விரிவான செயல்திட்டமாக இவ்வறிக்கை அமைந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
இந்திய அணியில் ஹர்ஷித் ராணா
19 Jun 2025இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
-
ஈரானின் உச்ச தலைவரை குறிவைத்தால்...ஈராக் ஷியா மதகுரு எச்சரிக்கை
19 Jun 2025ஈரான்: ஈரானில் உயர் தவைர் அயதுல்லா அலி கமேனியை குறிவைப்பதற்கு எதிராக ஈராக்கின் ஷியா பிரிவின் மதகுரு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
அகமதாபாத் விபத்து: ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பு
19 Jun 2025அமதாபாத்: குஜராத் மாநிலம் அமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த 12-ந் தேதி, புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக் குள்ளானது.
-
பிரதமர் மோடியை புகழ்ந்த இத்தாலி பிரதமர் மெலோணி
19 Jun 2025இத்தாலி: இந்தியா பிரதமரை பார்த்து நீங்கள் தான் பெஸ்ட் என்று இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோணி மகிழ்ச்சி பொங்க கூறினார்.
-
அமராவதி அணையிலிருந்து நீர் திறப்பு
19 Jun 2025கோவை: அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: 47 பேர் காயம்
19 Jun 2025டெல் அவிவ்: இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைகள் தாக்கியதில் 47 பேர் காயமடைந்தனர்.
-
கீவ் நகர் மீது பயங்கர தாக்குதல்: ரஷ்யாவுக்கு மேலும் அழுத்தம் கொடுக்க ஜெலன்ஸ்கி கோரிக்கை
19 Jun 2025உக்ரைன்: உக்ரைன்- ரஷ்யா இடையில் 3 வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இரு பக்கமும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த அதிபர் டிரம்ப் ஒப்புதல்...? வெளியான பரபரப்பு தகவல்
19 Jun 2025வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்த டிரம்ப் ஒப்புதல் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இந்தியா - இங்கி., முதல் டெஸ்ட் போட்டி இன்று லீட்சில் துவக்கம்
19 Jun 2025லீட்ஸ்: இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, லீட்சில் இன்று தொடங்க உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி...
-
த.வெ.க. மருத்துவர் அணி புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
19 Jun 2025சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் மருத்துவர் அணிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
-
விளையாட்டை விட கோலி உயர்ந்தவரில்லை: அஸ்வின்
19 Jun 2025லண்டன்: விராட் கோலி விளையாட்டை விட பெரியவரில்லை என இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்டுக்கு முன்பாக அஸ்வின் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது.
-
சென்னையில் லாரி ஏறி பள்ளி சிறுமி பலி: கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு
19 Jun 2025சென்னை: சென்னையில் லாரி ஏறி பள்ளி சிறுமி பலியான சம்பவத்தை அடுத்து அங்கு கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
-
இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்த போவதாக ஈரான் அறிவிப்பு
19 Jun 2025டெஹ்ரான்: இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 13-ந்தேதி ஈரான் மீது இ்ஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.
-
வரும் ஜூன் 24, 25-ம் தேதிகளில் அ.இ.அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
19 Jun 2025சென்னை: வரும் 24, 25 ஆகிய நாட்களில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
ஈரான்-இஸ்ரேல் மோதலில் மத்தியஸ்தம் செய்ய தயார் ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு
19 Jun 2025மாஸ்கோ: ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பரஸ்பர தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக புதின்
-
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு
19 Jun 2025லாஸ் ஏஞ்சல்ஸ்: திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ராபர்ட் புரூஸுக்கு எதிரான தேர்தல் வழக்கில் நயினார் நாகேந்திரன் ஆஜர்
19 Jun 2025சென்னை: திருநெல்வேலி தொகுதி எம்.பி ராபர்ட் புரூஸ் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், பா.ஜ.க.
-
சட்டவிரோத குடியேற்றம்; திருப்பூரில் 26 வங்கதேசத்தினர் கைது
19 Jun 2025திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் சட்டவிரோதமாக, போலி ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வந்த வங்கதேசத்தினர் 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
விமான விபத்தில் பலியான 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது
19 Jun 2025அகமதாபாத்: அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் பலியான 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
-
‘புற்றுநோய் போன்ற நாடு’ இஸ்ரேல் மீது வட கொரியா குற்றச்சாட்டு
19 Jun 2025தெஹ்ரான்: இஸ்ரேல் வான்வழி தாக்குதல் கொடூரமான செயல் என்று வட கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.
-
சோதனையின் போது வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
19 Jun 2025டெக்சாஸ்: அமெரிக்காவில் சோதனை முயற்சியின் போது ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் வெடித்து சிதறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து ஆடும் லெவன் அறிவிப்பு
19 Jun 2025லண்டன்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பதிவு செய்த 15 நாட்களில் புதிய வாக்காளர் அட்டை தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை
19 Jun 2025புதுடெல்லி: இனிமேல் பதிவு செய்த புதிய வாக்காளர் அட்டையை வாக்காளர்களிடம் 15 நாட்களில் வினியோகிக்கும் வகையில் புதிய முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. 
-
இந்தியா-பாக். போர் நிறுத்தத்துக்கு இரு நாட்டு தலைவர்களே காரணம் முதல் முறையாக டிரம்ப் ஒப்புதல்
19 Jun 2025வாஷிங்டன்: “இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 2 தலைவர்கள் தான், இரு நாடுகளுக்கு இடையே நிகழ்ந்த மோதலை நிறுத்தினார்கள்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல்மு
-
நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு: டெல்லியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
19 Jun 2025புதுடில்லி: 180 பேருடன் பயணித்த இண்டிகோ விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.