முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாருகேசி இசை வெளியீட்டு விழா

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025      சினிமா
Charukesi 2025-06-24

Source: provided

ஒய் ஜீ மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் சாருகேசி. சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ள இப்படத்தை அருண் ஆர் தயாரித்துள்ளார். சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி, தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு வசனம் பா. விஜய் எழுத, தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ளார். விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகர் சமுத்திரக்கனி, இந்த நாடகத்தை பார்த்ததும் அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று தோன்றியது. வாழ்க்கையில் ஒழுக்கமாக இருப்பவர்களை சினிமா என்றும் கைவிடாது என்றார். இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பேசும் போது, "ரஜினிகாந்த் இந்த நாடகத்தை பார்த்து விட்டு இதனை படமாக எடுங்கள் என்று பலமுறை ஒய் ஜி மகேந்திரனிடம் கூறியிருக்கிறார். ஆனால் ரஜினி காந்த இப்படி சொல்லி இருப்பது எனக்கு தெரியாது. இப்படத்தின் தயாரிப்பாளரான அருண் என்னிடம் நீங்கள் இந்த படத்தை இயக்கினால், நான் தயாரிக்கிறேன் என்று சொன்னார். நாடகத்தை படமாக மாற்றுவது மிகவும் கடினம். சாருகேசி நாடகத்தைப் பார்த்ததும் இரண்டு நாட்களில் திரைக்கதை எழுதி விட்டேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து