முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேல்-சபை தேர்தல்: முதல்வர் முன்னிலையில் மனு தாக்கல்

புதன்கிழமை, 12 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.13 - டெல்லி மேல்-சபை எம்.பி.க்களாக இருக்கும் ஞானதேசிகன் (காங்.), கனிமொழி, திருச்சி சிவா (தி.மு.க.), மைத்ரேயன், இளவரசன் (அ.தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யு.ை) ஆகிய 6 பேரின் பதவி காலம் வருகிற ஜூலை மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகின்றன.

அவர்களுக்கு பதில் புதிய எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 17-ந் தேதி மனுதாக்கல் முடிகிறது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களாக தற்போதைய எம்.பி. மைத்ரேயன், நீலகிரி மாவட்ட செயலாளர் கே.ஆர்.அர்ஜுனன், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் டி.ரத்தினவேல், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் ஆர்.லட்சுமணன், மாநில விவசாயி அணி செயலாளர் கு.தங்கமுத்து ஆகியோரை முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க. வேட்பாளர்கள் 5 பேரும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஒவ்வொரு வேட்பாளரின் மனுவையும் குறைந்தது 10 ம்.எல்.ஏ.க்கள் முன்மொழிய வேண்டும். அதன்படி அ.தி.மு.க. வேட்பாளர்களை 50 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிந்துள்ளனர்.

அனைவரும் மதியம் தலைமைச் செயலகம் புறப்பட்டுச் சென்றனர். நேற்று பகல் 1.40 மணிக்கு மேல் மேல்-சபை தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியான சட்டசபை செயலாளர் ஜமாலுதீனிடம் அ.தி.மு.க.  வேட்பாளர்கள் 5 பேரும் ஒவ்வொருவராக மனுதாக்கல் செய்தனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இந்த மனுதாக்கல் நடந்தது. வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வேட்புமனு தாக்கல் வருகிற 20-ந்தேதியுடன் முடிவடைகிறது. தேவைப்பட்டால் 27-ந்தேதி வாக்கெடுப்பு நடைபெறும். அன்றே முடிவு அறிவிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்