முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் 22 ல் பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு

புதன்கிழமை, 11 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மே.12 - பிளஸ் 2 தேர்வில் தவறியவர்களுக்காக சிறப்பு துணை தேர்வு ஜூன் 22 முதல் ஜூலை 2 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முன்னதாக இந்த தேர்வு தேதி தவறாக வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தேர்வில் மூன்று அல்லது அதற்கு குறைவான பாடங்களில் தோல்வியுற்றவர்கள் அல்லது தேர்வு எழுதாதவர்கள் இந்த சிறப்பு துணை தேர்வை எழுதலாம். ஒரு பாடத்திற்கு ரூ. 85. இரண்டு பாடங்களுக்கு ரூ. 135. மூன்று பாடங்களுக்கு ரூ. 185 கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவங்களை தாங்கள் படித்த பள்ளியிலேயே இம்மாதம் 13 ம் தேதி வரை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். 

தனித்தேர்வர்கள் துணை தேர்வுக்கான விண்ணப்பங்களை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் இம்மாதம் 16 ம் தேதி முதல் 20 ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்திற்கு இம்மாதம் 24 ம் தேதிக்குள் சென்று சேரும் வகையில் பதிவு அஞ்சலிலோ, நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்