முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

108 அவசர ஊர்தியின் 5ம் வருட நிறைவு விழா

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப்.20 - எயஓஙதஐ  108 அவசர ஊர்தியின் 5ம் வருட நிறைவு விழா சென்னை தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராஜர் கலை அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  அவர்கள் தலைமை தாங்கினார். டாக்டர் ஜெ. ராதாகிருழணன், ஐஅந , மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி செயலர், பங்கஞு குமார் பன்சால், ஐஅந , திட்ட இயக்குநர், தமிழ்நாடு சுகாதார ஒழுங்குமுறை திட்டம், மு. கிருஷ்ணம் ராஜு, எயஓ உஙதஐ  இயக்குநர், மற்றும் சுபோத் சத்யவதி, எயஓ உஙதஐ  தலைமை நிர்வாக அதிகாதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். 

இதில் அமைச்சர் வீரமணி பேசியதாவது:-

108 அவசர ஊர்தி சேவை 19 செப்டம்பர் 2008ல் தனது சேவையை துவங்கியது. செப்டம்பர் மாதத்தில் ஒரே ஒரு நோயாளி மட்டும் அவ்வூர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அடுத்த மாதமான அக்டோபர் மாதத்தில் 60 பேர் மருத்துவமனைக்கு கொண்டவரப்பட்டனர். இந்த புள்ளிவிவரம் படிப்படியாக அதிகரித்து இந்த வருடம் இது மாதமொன்றுக்கு சராசரியாக 1530 பேர் அதாவது தினமும் 50 பேர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். 

ஏறக்குறைய 19000 நோயாளிகள் வருடமொன்றுக்கு இம்மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர். 

இதில் 40 ெநோயாளிகள் (7500) பிற மருத்துவமனைகளிலிருந்து முக்கியமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்படுகின்றனர். அவர்கள் தகுந்த மருத்துவ சிகிச்சைக்குப்பின் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். 

60 ெநோயாளிகள் (11500) அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு தகுந்த மருத்துவ சிகிச்சைக்குப்பின் காப்பாற்றப்பட்டுள்ளனர். 

35 ெ(6300) பேர் வாகன விபத்தினாலும் (சாலை விபத்துகள்) - இதில் 

75 ெ(4725) இரு சக்கர வாகன விபத்துகள் 

5 ெ(315) மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விபத்துகள் 

10 ெ(1900) இதர விபத்துகளான உயரமான இடங்களிலிருந்து விழுதல் 

10-11 ெ(1900-2000) பக்கவாதம்/வலிப்பு நோய் 

8 ெ(1500) இருதய நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர் விபத்துகளில் சிக்கிய அனேகம் பேர் வரிசைகிரமப்படி கீழ்க்காணும் மாவட்டங்களிலிருந்து வருகின்றனர் 

காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் 108 அவரசஊர்தி மூலம் இம்மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் நோயாளிகளில் 65பேர் ஆண்களேயாவர். 

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

20 அவசர மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் குழுக்களாக அரசு பொது மருத்துவமனையில் பயிற்சியளிக்கப்படுகிறது. 

அவசர மருத்துவ செயல்திறன்களான 

நோளாளிகளுக்கு இரத்தகுழாயில் மருந்து செலுத்துதல் 

பிராணவாயு செலுத்துதல் 

காயங்களுக்கு கட்டுபோடுதல் 

உடைந்த எலும்புகளுக்கு கட்டுபோடுதல் 

மூச்சு விடுவதற்கு செயற்கை குழாய் பொருத்துதல் போன்றவை கற்றுத்தரப்படுகின்றன. 

அவசர மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்களின் பணி மிகவும் முக்கியமானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்