முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் காங்., தனிமைப்படுத்தப் பட்டுள்ளது

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

சிவகங்கை, டிச.26 - அகில இந்திய அளவில் சோதனையான கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

அகில இந்திய அளவில் சோதனையான கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது.  கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பல பணிகளைச் செய்துள்ளது. 7 சதவீதமாக இருந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 2 ஆண்டுகளில் 8 சதவீதமாக உயர்ந் துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றம், கடடாயக் கல்வி, உணவு பாதுகாப்புச் சட்டம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வசதி, 1.15 லட்சம் வங்கிக் கிளைகள் திறப்பு போன்ற திட்டங்கள் மூலம் மக்கள் பயனடைந்துள்ளனர். இருந்தபோதிலும் நாடு முழுவதிலும் சீரான வளர்ச்சி ஏற்ப்டடுள்ளது என்று கூற முடியாது. ஒரு சில இடங்களில் மகத் தான வளர்ச்சியும்,  ஒரு சில இடங்களில் மன நிறைவு தராத வளர்ச்சியும் உள்ளது. 

திருச்சி, மதுரை போன்ற இடங்களில் சர்வதேச அளவிலான விமான நிலைய ங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் கடந்த 10 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டுள்ளன. காலச் சுழற்சியால் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.  இதை எப்படிச் சரி செய்யப்போகிறோம் என்பதை கட்சித் தலைவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஒரு புதிய  தலைவரை முன்னிலைப்படுத்தி பாஜக வேகமாகச் செயல்பட்டு வருகிறது என்பதை மறுக்க முசியாது. ஆர்.எஸ். எஸ். அமைப்புக்கு பன்முகங்கள் உண்டு. இதில் அரசியல் முகமாக இருப்பது பா.ஜ.க. காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் போட்டி இல்லை. ஆர்.எஸ்.எஸ்ஸூடன் தான் போட்டி உள்ளது. 

இனி தேர்தல் அடுத்தடுத்து வரும். இதில் காங்கிரஸ் வெற்றிபெறும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனிமைப் படு த்தப்பட்டுள்ளது. தனிமை காரணமாக கொள்கையை காங்கிரஸ் விட்டுவிட முடி யாது. உரிய வகையில் பணியாற்றி தேர்தலில் எப்படி செயல்படுவது என்பதுதான் முக்கியம். தொடர்ந்து கட்சிப் பதவிகளில் உள்ளவர்களுக்கு மாறுதல் வரத்தான் செய்யும். பூத் கமிட்டியில் செயல்படுபவர்கள்தான் கட்சியின் அடித்தளம். புதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும், முதியவர்கள் வழி விட வேண்டும் என்றார் சிதம்பரம்.                                        

         

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்