முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் நடப்பது எப்போது?

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, பிப்.23 - தமிழ்நாடு உள்பட 5 மாநிலத் தேர்தல் நடப்பது எப்போது என்ற விபரத்தினை தேர்தல் ஆணையம் மார்ச் 1 ம் தேதி அறிவிக்கலாம் என்று தெரிகிறது.

தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுகிறது. மேற்குவங்கத்தில் 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. மார்ச் 1 ம் தேதி தேர்தல் தேதிகளை ஆணையம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு மே மாதத்தில் ஓட்டுப்பதிவு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்குவங்கம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள், உல்பா தீவிரவாதிகள் ஆகியோரின் அச்சுறுத்தல் இருப்பதால் இந்த மாநிலங்களில் கூடுதலான நாட்களில் ஓட்டுப்பதிவு நடத்தலாம் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்