முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை குண்டு வெடிப்பில் ஆர்.ஆர்.எஸ்.க்கு தொடர்பு

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.27 - மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஆர்.ஆர்.எஸ். இயக்கத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கடும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். மும்பையில் கடந்த 13-ம் தேதி தாதர் பஸ்நிலையம் உள்பட 3 இடங்களில் தீவிரவாதிகள் தொடர் குண்டுவெடித்தனர். இதில் 17 பேர் பலியானார்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பதில் போலீசாரும் புலனாய்வு அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். குண்டுவெடிப்புக்கு பயன்படுத்திய ஸ்கூட்டர் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதன் உரிமையாளரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்தநிலையில் மும்பை குண்டுவெடிப்பில் ஆர்.ஆர்.எஸ்.இயக்கத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் கடுமையான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். மும்பையில் கடந்த 13-ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்துமத அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் திக்விஜய் சிங் கூறியுள்ளார். திக்விஜய் சிங் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்பவர். அண்ணாஹசாரே மீண்டும் உண்ணாவிரதம் இருந்தால் பாபா ராம் தேவுக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும் என்று கூறி சர்ச்சையில் சிக்கியவர்தான் திக்விஜய்சிங். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடனும் மோதல் போக்கில் ஈடுபட்டவர். இவர் மத்தியப்பிரதேச மாநில முதல்வராக இருந்தவர். ராகுல் காந்தி தீவிர ஆதரவாளர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்