முக்கிய செய்திகள்

வீரபாண்டி ஆறுமுகம் உட்பட 10 பேரை பிடிக்க தனிப்படை

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சேலம் ஜூலை.21​- சேலம் அங்கம்மாள் காலனி நில விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட 10 பேரை பிடிக்க 12 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த தி.மு.க.ஆட்சிகாலத்தில் சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள அங்கம்மாள் காலனியில் வசித்து வந்த 31 குடும்பத்தினரை ஒரு நாள் திடீரென நள்ளிரவில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆட்கள் அவர்களை அடித்து விரட்டி சொற்ப தொகை கொடுத்து மிரட்டி பத்திரத்தில் கையெழுத்து வாங்கினர். பின்னர் அந்த நிலம் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர் கவுசிக nullபதி பெயரில் பதிவு செய்யப்பட்டது.  இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர் .ஆனால் போலீசார் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இது தொடர்பாக சென்னை ஐ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஜட்ஜ் அமைச்சர் வீராபண்டி ஆறுமுகத்தின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டும் போலீசார் அதை கண்டுகொள்ளவில்லை. இந்த நில விவகாரத்தில் அப்போதைய அரசு அதிகாரிகள் அனைவரும் அமைச்சருக்கு ஆதரவாகவே இருந்தனர்.

கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க.ஆட்சி அமைத்தால் நிலத்தை பறி கொடுத்தவர்களுக்கு அபகரித்தவர்களிடம் இருந்து வாங்கி கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதே போல் சேலத்தில் பிரச்சாரத்திற்கு வந்த போதும் அங்கம்மாள் காலனி நிலம் மீட்கப்பட்டு உரியவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் பேசினார்.  

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் நில மோசடிகளை விசாரிக்கவே தனிப்பிரிவை ஏற்படுத்தினார். மாநிலம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான புகார்கள் தனிப்பிரிவு போலீசாரிடம் வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த தி.மு.க.ஆட்சியில் பாதிக்கப்பட்ட அங்கம்மாள் காலனி பொதுமக்கள் கலெக்டரிடம் தங்கள் நிலத்தை மீட்டு தங்களுக்கு வழங்க வேண்டும் என புகார் மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் மகரnullஷணம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கத்திற்கு பரிந்துரை செய்தார். அவர் இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அவர்கள் இந்த வழக்கை விசாரித்து அங்கம்மாள் காலனி நில அபகரிப்பில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் 147( அத்துமீறல்), 148 பயங்க ஆயுதங்களால் கலகம் விளைவித்தல்) 447(அத்துமீறி உள்ளே நுழைதல்), 109 (குற்றம் செய்ய தூண்டுதல்), 467(நம்பிக்கை மோசடி), 506(2)(கொலை மிரட்டல்) ஆகிய ஏழு பிரிவுகளில் வீரபாண்டி ஆறுமுகம் முதல் குற்றவாளியாகவும் அதில் தொடர்புடைய அவரது தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார், உறவினர் கவுசிகnullபதி, காங்கிரஸ் பிரமுகர்கள் எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, உலக நம்பி, தி.மு.க.கவுன்சிலர் ஜிம் ராமு, ஆட்டோ முருகன், பீடாகடை கனகராஜ், சித்தானந்தம் கறிக்கடை பெருமாள், அப்போதைய சேலம் ஆர்.டி.ஓ.பாலகுருசாமி, அப்போதைய பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் ஆகிய 13 பேர் மீது நேற்று முன் தினம் இரவு வழக்கு பதிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் பிரமுகர் எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, ஆட்டோ முருகன், பீடா கடை கனகராஜ் ஆகியோரை நேற்று முன் தினம் இரவே போலீசார் கைது செய்தனர்.

இதே போல் சேலம் 5 ரோட்டில் உள்ள சென்னீஸ் கேட்வே ஹோட்டல் எதிரே பிரிமியர் ரோலர் மில்ஸ் சொந்தமான நிலம் இருந்தது. இதன் பங்குதாரர்களாக கே.வெங்கடாஜலம், வி.ரவிச்சந்திரன், வி.வேணுகோபால், வி.பாலாஜி ஆகியோர் இருந்தனர். இந்த நிலத்தின் பேரில் வெங்கடாஜலம் என்பவர் ரூ.3 கோடிக்கு பவர் எழுதிக் கொடுத்து ஆடிட்டர் துரைசாமி என்பவரிடம் ரூ.3 கோடி கடன் வாங்கியிருந்தார். அதற்கான வட்டி தொகையையும் கொடுத்துவந்துள்ளார். பின்னர் நிலத்தை மீட்க செல்கையில் அவர் நிலம் தரமுடியாது பவர் எழுதிக்கொடுத்ததால் நிலம் எனக்கு சொந்தம் என கூறி மிரட்டியுள்ளார். இது தொடர்பாக அப்போதைய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும் இதில் தலையிட்டு வெங்கடாஜலத்தை மிரட்டியுள்ளதாக தெரிகிறது. பின்னர் அந்த நிலத்தை சேலத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.ஆர்.எஸ்.சீனிவாசன், அவரது மகன் ராமநாதன், மனைவி ராஜேஸ்வரி உள்ளிட்டோருக்கு ரூ.30 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். அதில் சொற்ப தொகையான 7 கோடியை வெங்கடாஜலத்திற்கு கொடுத்துவிட்டு மற்ற பணத்தை வீரபாண்டி ஆறுமுகம் உள்பட பலர் பங்கிட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த வெங்கடாஜலம் இறந்தே போனார்.

இந்த நிலையில் வெங்கடாஜலத்தின் மகன் ரவிச்சந்திரன் என்பரும் இந்த நிலம் அபகரிப்பு குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கத்திடம் புகார் கொடுத்தார்.  அவர் இது குறித்து விசாரிக்க மத்திய குற்ற பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி இந்த நில அபகரிப்பில் தொடர்புடைய முதல் குற்றவாளியாக வீரபாண்டி ஆறுமுகம்,  ஆடிட்டர் துரைசாமி, அவரது மகன் அசோக் துரைசாமி,சி.துரைசாமி, பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமணன், ஏ.ஆர்.ஆர்.எஸ்.சீனிவாசன், அழகாபுரம் தி.மு.க.செயலாளர் அழகாபுரம் முரளி, ஏ.ஆர்.ஆர்.எஸ்.சீனிவாசன், மகன் ராமநாதன், சீனிவாசன் மனைவி ராஜேஸ்வரி உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.85 கோடியாகும்.

மேற்கண்ட 2 வழக்குகளிலும் வீரபாண்டி ஆறுமுகம் முதல்குற்றவாளி என்பதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அங்கம்மாள் காலனி நில அபகரிப்பால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று கூடினர் .அவர்களிடம் போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு மற்றும் பிரிமியல் மில்ஸ் நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இந்த இரண்டு வழக்கிலும் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்களை கண்டு பிடித்து கைது செய்ய 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த நிலையில் இந்த வழக்குகளில் போலீசாரின்  கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தரப்பில் சென்னை ஐ கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.ஆனால் போலீசாரோ முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்குள் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட தி.மு.க.வினர், அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரி,மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் சேலம் மாவட்ட பொதுமக்களிடையே மகிழ்ச்சியையும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதே நேரத்தில் தி.மு.க.வினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: