முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேம் சோப்ராவுக்கு அன்னை தெரசா விருது

வியாழக்கிழமை, 3 மார்ச் 2011      சினிமா
Image Unavailable

புதுடெல்லி,மார்ச் - 3 - பிரபல இந்தி நடிகர் பிரேம் சோப்ராவுக்கு அன்னை தெரசா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கொல்கத்தாவில் நடைபெறும் விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளாக இந்தி திரையுலகில் சேவை செய்து வரும் நடிகர் பிரேம் சோப்ரா ஏழைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக போராடும் கதாநாயகனாக நடித்ததோடு சமூக சேவையையும் சிறந்த முறையில் ஆற்றி வருகிறார். இதனை பாராட்டி அவருக்கு அன்னை தெரசா விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 76 வயதாகும் பிரேம் சோப்ரா, அவருடைய நடிப்பை ரசிகர்கள் இன்னும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். 

இந்த விருதுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை மரியாதையுடனும் அடக்கத்துடனும் ஏற்றுக்கொள்கிறேன் என்று பிரேம் சோப்ரா கூறினார். ராஜீவ் காந்தி, தலாய் லாமா ஆகியோர் பெயர்களில் வழங்கப்படும் விருதுகளையும் ஏற்கனவே பிரேம் சோப்ரா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஏழை மக்களுக்காக அயராது உழைத்த அன்னை தெரசா விருது எனக்கு கிடைத்திருப்பது விசேஷமாகும். இந்த விருது எனக்கு கிடைத்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இதை ஒரு கெளரமாக நினைக்கிறேன் என்றும் பிரேம் சோப்ரா கூறினார். பிரேம் சோப்ரா கடந்த 50 ஆண்டுகளாக இந்தி திரைப்பட உலகில் இருந்து வருகிறார். இந்த 50 ஆண்டுகளில் அவர் ஏறக்குறைய 400 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்