முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 மாதத்தில் தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு: ஆசாத்

வியாழக்கிழமை, 28 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

நகரி,ஜூலை.29 - ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க கோரி தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து கட்சி எம்.பி. எம்.எல்.ஏக்கள் சில வாரங்களுக்கு முன்பு பதவியை ராஜினாமா செய்தனர். இதை சபாநாயகர் ஏற்க மறுத்து விட்டார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி எம்.எல்.ஏக்கள் மீண்டும் பதவியை ராஜினாமா செய்தனர். தெலுங்கு சேதம், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் மீண்டும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். இதையறிந்ததும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் ஐதராபாத் சென்றார். அவர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தெலுங்கானா தனி மாநில பிரச்சினையை இன்னும் 2 மாதத்தில் தீர்த்து விடுவோம். இதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளை சேர்ந்த எம்.பி.எம்.எல்.ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தெலுங்கானா விவகாரத்தில் யாருக்கும் பாதகம் இல்லாமல் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்