முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்த்தீனியம் விஷ செடிகள் அழிக்கப்படும்: முதல்வர்

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.11 - தமிழக உள்ள விவசாய நிலங்களில் பரவலாக காணப்படும் பார்த்தீனியம் விஷ செடிகளை அழிக்க இயக்கம் தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மூன்றாவது நாளாக தமிழக சட்டபேரவையில் 2011-12-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் பங்கேற்று பேசினார். அப்போது சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது தங்கதமிழ்செல்வன் (அ.தி.மு.க.):​ விவசாய நிலங்களை பாதுக்காக பார்த்தீனியம் விஷ செடிகளை அழிக்க அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார். 

அதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தபோது, உப்பு கரைசல் மற்றும் சோப்பு nullநீர் கலவையை பார்த்தீனியம் செடிகள் உள்ள இடத்தில் தெளித்தால் செடிகள் அழிந்து விடும் என்று பதில் கூறினார். தொடர்ந்து பேசிய தங்கதமிழ் செல்வன், ஒரு லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் உப்பு மற்றும் சிறிதளவு சோப்புக் கரைசலை கலந்து தெளித்தால் பார்த்தீனியம் விஷ செடிகள் அழிந்து விடும். இந்த செடிகளால் பயிர்கள் வீணாகி வருகின்றன. கால்நடைகள் தின்றால் அவற்றுக்கு நோய் வருகின்றன. மனிதர்கள் தொட்டால் உடலில் அரிப்பு ஏற்படுகிறது. எனவே விஷ செடிகள் அடியோடு அழிக்க தன்னார்வ தொண்டர்கள், மாணவர்கள், 100 நாள் கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிவோரை கொண்டு ஒரு இயக்கத்தை தொடங்கி இந்த செடிகளை அழிக்க வேண்டும் என்றார். 

இதற்கு பதில் அளித்து முதல்​அமைச்சர் ஜெயலலிதா கூறியதாவது:-​ 

தங்கத்தமிழ்ச்செல்வன் யோசனை வரவேற்கத்தக்கது. பார்த்தீனியம் செடிகளை அழிக்க இயக்கம் தொடங்க வேண்டும் என்று கூறினார். தமிழக அரசு அது போன்ற இயக்கம் தொடங்கி பார்த்தீனியம் செடிகளை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளும். 

இவ்வாறு ஜெயலலிதா பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்