முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா பிரதமராக வேண்டும் உணவுத்துறை அமைச்சர் புத்தி சந்திரன்பேச்சு

திங்கட்கிழமை, 19 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

ஊட்டி, செப்.- 19 - தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இலவச திட்டங்கள் இந்தியா அளவில் அமல்படுத்த முதல்வர் ஜெயலலிதா பாரதப் பிரதமராக வரவேண்டுமென உணவுத்துறை அமைச்சர் புத்தி சந்திரன் பேசினார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்புத்திட்டங்களில் ஒன்றான பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா ஊட்டியருகேயுள்ள தாவணெ கிராமத்தில் நேற்று நடைபெற்றது. நீலகிரி மாவட்ட கல்வித்துறை சார்பில் ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கடநாடு ஊராட்சிக்குட்பட்ட தாவணெ கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தலைமை தாங்கி பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக உணவுத்துறை அமைச்சர் புத்தி சந்திரன் இப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் 48 மாணவ, மாணவியர்களுக்கு இலவச லேப்டாப்களை வழங்கி பேசியதாவது:​தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சீறிய சிந்தனையில் உதித்திட்ட மாணவ, மாணவியர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் முதன் முதலாக இன்று தாவணெ பள்ளியில் துவக்கி வைக்கப்படுகிறது. இந்தியாவிலேயே பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதன் முதலாக தமிழக முதல்வர் துவக்கி வைத்துள்ளார். பள்ளி மாணவர்கள் இத்திட்டத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதற்கு பள்ளி ஆசிரியர்கள் சிரமம் பாராது மாணவர்கள் பயன்பெறும் வகையில் வழிகாட்ட வேண்டும். தமிழக முதல்வர் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஆடுகள், கறவை மாடுகள், மாணவர்களுக்கு லேப்டாப், ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். நீலகிரி மாவட்டம் குளிர் பிரதேசமாக இருப்பதால் மின்விசிறிக்குப் பதில் மின்காந்த அடுப்பு வழங்க வேண்டும் என்ற விடுத்த கோரிக்கையை ஏற்று தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு மின்விசிறிக்குப் பதில் மின்காந்த அடுப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அரசு தமிழக மக்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க.,அரசு பொறுப்பேற்ற 4 மாதங்களில் தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல அனைத்து திட்டங்களையும் அறிவித்து விட்டார். ஆகையால் வாழ்வு இருக்கும் வரை முதல்வர் ஜெயலலிதாவை மறக்க முடியாத அளவிற்கு எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக தீட்டி நிறைவேற்றி வரும் தமிழக முதல்வர். இத்திட்டங்கள் அனைத்தும் இந்தியா அளவில் அமல்படுத்த வேண்டுமெனில் ஜெயலலிதா பாரதப்பிரதமராக வேண்டும். அது விரைவில் நிறைவேற வேண்டும். எனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ள இலவச லேப்டாப்களை மாணவ, மாணவிகள் ஏனோ, தானோ என்று பயன்படுத்தாமல், அதனை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அரங்கநாதன்
வரவேற்று பேசினார். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் சிவராமன் நன்றி கூறினார். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் டி.எச்.பலராமன், கடநாடுஊ ஊராட்சி மன்ற தலைவர் குமார், ஊர்தலைவர் ஹாலன் ஆகியோர் பேசினர்.
வேளாண் பல்கலைக்கழக நிர்வாகக்குழு உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன்,
அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாயன், எல்.மணி, தேனாடு லட்சுமணன்,வினோத், தூனேரி ஊராட்சி தலைவர் பீமன், குண்டன் மற்றும் பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவினை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பெ.தமிழ் இனியன் தொகுத்து வழங்கினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்