முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர்களை கவருவதற்காக மது விருந்து நடத்தினால் குண்டர்சட்டம் - சகாயம் எச்சரிக்கை

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,செப்.- 28 - வாக்காளர்களை கவருவதற்காக பொது விருந்து, மது விருந்து நடத்தினால்  அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் சகாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, உள்ளாட்சி தேர்தலில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் சில உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட கூட்டம் நடைபெற்றதாக தகவல் வருகிறது. பாரபட்சமற்ற வெளிப்படையான தேர்தல் நடைமுறைகளை பாதிக்க செய்யும் படியான இது போன்ற ஏலத்தை நடத்துவதோ, இதில் பங்கு கொள்வதோ தூண்டுவதோ சட்டப்படியான குற்றமாகும். இது போல் வாக்காளர்களை கவருவதற்காக பொது விருந்து, மது விருந்து வினியோகம் வழங்குவதும் குற்றமாகும். இந்த மாதிரியான நடவடிக்கைகள்  தகவல்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர், மக்கள் நல  பணியாளர்கள் மற்றும் ஊராட்சி உதவியாளர்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.    இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே காவல் துறைக்கு இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது 110 குற்றவியல் நடைமுறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறிவுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் தமிழ்நாடு சட்டம் 14 -1982 ல் ( குண்டர் சட்டத்தில்) நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை பதிவு செய்ய மாவட்ட ஆட்சியரகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் விதிகளில் குறிப்பிட்டுள்ள தொகைகளுக்கு மேல் தேர்தலுக்காக செலவழிக்க கூடாது.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்