முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் வழக்குகளுக்கு அரசு பணம் குறித்து விசாரணை

வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

திருவனந்தபுரம், நவ. 4 - கேரளாவில் முதல் அமைச்சராக அச்சுதானந்தன் இருந்த போது இடமலையாறு மின் திட்ட ஊழல் மற்றும் ஐஸ்கிரீம் பார்லர் வழக்குகள் ஐகோர்ட்டில் நடத்தப்பட்டன. இந்த வழக்குகளில் வாதாட சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதற்காக அச்சுதானந்தன் ஆட்சிக் காலத்தில் அரசு பணம் தேவையற்ற முறையில் வீணடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும் கேரளாவில் தலை சிறந்த வக்கீல்கள் பலர் இருக்க, சுப்ரீம் கோர்ட் வக்கீல்களை வைத்து வாதாட காரணம் என்ன? என்றும் கேரள ஐகோர்ட் தற்போது விளக்கம் கேட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் உம்மன்சாண்டி கூறுகையில், முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் ஆட்சியில் ஊழல் தொடர்பான வழக்குகளுக்கு தேவையற்ற முறையில் அரசு பணம் வீணடிக்கப்பட்டு இருந்தால் அது குறித்து விசாரணை நடத்தப்படும். மேலும் இந்த ஊழல் வழக்குகளில் கேரள ஐகோர்ட்டில் வாதாடிய சுப்ரீம் கோர்ட் வக்கீல்களுக்கு இன்னமு வழக்கு செலவு லட்சக்கணக்கில் கொடுக்கப்படவில்லை. இது பற்றியும், விசாரணை நடத்தப்படும். கடந்த அரசு தேவையான முறையில் செலவு செய்திருந்தால் விசாரணைக்குப் பின்பு அதை எங்கள் அரசு ஏற்கும் என்று உம்மன்சாண்டி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்