முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்ஸார் நிறுவன அதிகாரிகள் மீது குற்றப் பத்திரிகை

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.11 - 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் எஸ்ஸார் நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர் மீது சி.பி.ஐ. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூயாஸ் என்பவர் தலைமையிலான எஸ்ஸார் குழுமம் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்கு லூப் டெலிகாம் என்ற நிறுவனத்தில் 10 சதவீத பங்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு நிறுவனத்தில் 10 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் ஒரு நிறுவனம் 2 ஜி. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமத்தை பெற விதியில் இடமில்லை. ஆனால் இந்த விதியை மீறி எஸ்ஸார் நிறுவனம் 2 ஜி. அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்றதாக கூறப்படுகிறது. இது கிரிமினல் சதித்திட்டமாக கருதப்படுகிறது. மேலும் சில தகவல்களை இந்நிறுவனம் மறைக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. எனவே 2 ஜி. அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் எஸ்ஸார் குழுமத்தைச் சேர்ந்த சில அதிகாரிகளை சேர்க்க சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இவர்கள்  மீது சி.பி.ஐ. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என்று விஷயமறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. இதற்கான ஒப்புதலை சி.பி.ஐ. இயக்குனர் ஏ.பி.சிங்கிற்கு அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி ஒப்புதல் கொடுத்துவிட்டதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. ஆனால் தாங்கள் எந்த விதியையும் மீறவில்லை என்று எஸ்ஸார் குழுமம் கூறிவருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்