முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.ஸ்டாலின் கூட்டாளிகள் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.23 - வீடு ஆக்கிரமிப்பு செய்த விவகாரத்தில் போலீசார் ஸ்டாலின் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் குற்றம் சாட்டப்பட்டு ஸ்டாலினின் கூட்டாளிகள் இருவர் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். அந்த மனுவை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை சித்தரஞ்சன் சாலையில் மு.க.ஸ்டாலின் பங்களா உள்ளது. அதன் பக்கத்தில் 2 1/2 கிரவுண்டு நிலம், வீடு சேஷாத்திரிகுமார் என்பவருக்கு சொந்தமாக உள்ளது. இந்த இடத்தை இவர் வாடகைக்கு விட்டிருந்தார். இந்த இடத்தை சோஷாத்திரிகுமாரை மிரட்டி 5 1/2 கோடி ரூபாய்க்கு எழுதி வாங்கியதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஸ்டாலின் உள்பட 6 பேர் மீது சேஷாத்திரிகுமார் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் பல பிரிவுகளில் ஸ்டாலின் உள்பட 6 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு சம்மந்தமாக சைதாப்பேட்டை கோர்ட்டில் புகார்தாரர் சேஷாத்திரிகுமார், பதிவாளர் உள்பட பலரும் சென்ற வாரம் சாட்சியம் அளித்திருந்தனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ராஜாசங்கர் ஆகிய இருவரும் ஏற்கனவே சென்னை உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர். இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் குற்றம்சாட்டப்பட்ட சீனிவாசன் மற்றும் இந்த இடத்தை வாங்கிய ஐதராபாத்தை சேர்ந்த நட்சத்திர ஓட்டல் அதிபர் வேணுகோபால் ரெட்டி ஆகிய இருவரும் தங்களுக்கு முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதி பழனிவேல் முன்பு வந்தது. அப்பொழுது நீதிபதி இந்த குற்றத்தில் முகந்திரம் உள்ளது. அவர்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு கடுமையானது என்று கூறி இவ்விருவர் முன்ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்