முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள முதல்வராக 2-வது முறையாக பதவியேற்றார் பினராய் விஜயன்: பிரதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

வியாழக்கிழமை, 20 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான அரசின் புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டது.

கேரள மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 99 இடங்களில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 2-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முதல்வராகப் பதவி ஏற்கும் நிகழ்ச்சியை பினராய் விஜயன் ஒத்திவைத்தார்.   பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக பினராய் விஜயன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பதவியேற்றுக் கொண்டார். கவர்னர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.  கேரளாவில் அமையும் புதிய அரசில் 21 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்ட 12 பேரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இடதுசாரி கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளில் ஒரு எம்.எல்.ஏ. மட்டும் வைத்திருக்கும் 4 கட்சிகளுக்கு அமைச்சரவையில் தலா 30 மாதங்கள் இடம் வழங்கப்பட உள்ளது.

புதிய அரசில் அமைச்சர்களாக புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எம்.வி.கோவிந்தன், கே.ராதாகிருஷ்ணன், கே.என்.பாலகோபால், பி.ராஜீவ், வி.என்.வாசன், சஜி செரியன், வி.சிவன்குட்டி, முகமது ரியாஸ், மருத்துவர் ஆர்.பிந்து, வீணா ஜார்ஜ், வி.அப்துல் ரஹ்மான் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். கடந்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவுக்கு அமைச்சரவையில் இடமில்லை. முதல் முறையாக எம்.எல்.ஏ.வான பினராய் விஜயனின் மருமகன் முகமது ரியாஸுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

2-வது முறையாக முதல்வராக பதவியேற்ற பினராய் விஜயனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,  முதல்வராக பதவியேற்று தனது இரண்டாவது பதவி காலத்தை தொடங்கிய பினராய் விஜயனுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். 

கேரள முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கேரள முதல்வராக பதவியேற்றுள்ள என் சகோதரர் பினராய் விஜயனுக்கு வாழ்த்துக்கள். பினராய் விஜயனின் விடாமுயற்சி, சமூக சமத்துவம் போன்றவை கேரள மக்களின் செழிப்புக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து