முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தற்காப்பு கலையான ஜூடோவின் தாயகம்

இன்றைக்கு ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பெற்றுள்ளதும், திரைப்படங்களில் சண்டை காட்சிகள் மூலம் பிரபலமானதுமான ஜூடோ எங்கு தோன்றியது தெரியுமா..ஜப்பானில். Kanō Jigorō (1860–1938) என்பவரால் பழைய ஜப்பானிய சமுராய் மரபில் காணப்பட்ட ஜூஜிட்சு மற்றும் பழைய சீன மரபுகளிலிருந்தும் 1882 இல் உருவாக்கப்பட்டது. இதற்காக கோடோகான் ஸ்கூல் ஆஃப் ஜூடோ பள்ளியும் உருவாக்கப்பட்டது. ஜூடோவுக்கும் கராத்தேவுக்கும் என்ன வித்தியாசம். இரண்டுமே வெறும் கைகளால் சண்டையிடுவது போல தோன்றினாலும், கராத்தே ஒரு சண்டைகலை, ஜூடோ ஒரு தற்காப்பு கலை. 1964 இல் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் முதன்முறையாக ஜூடோ இடம் பெற்றது. 1992 இல் பெண்களுக்கான ஜூடோ போட்டிகள் ஒலிம்பிக்கில் இடம் பெற்றன.

கடலுக்கு அடியில் முட்டையை உடைத்தால் என்ன ஆகும்

முட்டையை நாம் நிலத்தின் மீது உடைத்தால் அது அப்படியே உடைந்து கலைந்து போவதை நம்மால் காண முடியும். அதே வேளையில் கடலுக்கு அடியில் உடைத்தால் என்ன ஆகும் தெரியுமா... கடலுக்கு அடியில் சுமார் 18 மீட்டர் அல்லது 60 அடி ஆழத்துக்கு கீழே சென்று விட்டாலே அங்கு அழுத்தம் அதிகரித்து காணப்படும். அது வெளிப்புறத்தில் காணப்படுவதை காட்டிலும் 2.8 மடங்கு கூடுதலான அழுத்தத்துடன் இருக்கும். இங்கு ஒரு முட்டையை உடைத்தால் அழுத்தம் காரணமாக அது கலைந்து போகாமல் ஒரு ஜெல்லி மீனைப் போல காட்சி அளிக்கும் என்பது ஆச்சரியம் தானே..

லயன் ஃபிஷ்

தனது உணவுக்காக மற்ற அரிய வகை மீன்களை அழித்துவரும் லயன்ஃபிஷ்-ன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பெர்முடா நாட்டு உணவகம் ஒன்று லயன்ஃபிஷ்-ஐ வைத்து சமையல் போட்டியை நடத்தியது. இதற்காக ஆளில்லா ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த ரோபோ கடலில் உள்ள லயன்ஃபிஷ்க்களை வேட்டையாடியது. கரைக்கு பிடித்து வந்து வியப்பை ஏற்படுத்தியது.

நிலாவை போன்று...

சீனாவில், யூகோங்-1 என்று பெயரிடப்பட்ட ஆய்வகத்திற்குள் நிலாவில் உள்ள தட்பவெப்பநிலை, காற்றழுத்தம் ஆகியவை இருக்கும். இதன் மூலம் நிலாவில் மனிதன் தங்கி அங்குள்ள சூழலை கையாள்வதற்கான ஆய்வாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. “விண்வெளி ஆய்வில் சீனா, உலகின் மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது. 2018-ம் ஆண்டு நிலாவின் மறைவிடங்களை ஆராயும் பணிக்கு முன்னோட்டமாக இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மாணவர்களில் 4 பேர் கொண்ட முதல் குழு, 60 நாட்களும், 4 பேர் கொண்ட இரண்டாவது குழு 200 நாட்களும் தங்குவார்கள். இந்த ஆய்வகத்தில் ஒரு தங்குமிடம், 2 தாவரங்களுக்கான பசுமைக்கூடம் இருக்கும். சீனா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து நிலா கிராமத்தை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

தமிழில் ஸ்கைப்

குறைந்த அளவு இணைய வேகத்திலும் சிறப்பாக இயங்கும் வகையிலான ஸ்கைப் லைட் செயலியை இந்திய பயனாளர்களுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் இந்த செயலி, குறைவான இணைய வேகம் கொண்ட மொபைல் போன்களிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  மேலும், தமிழ், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளிலும் ஸ்கைப் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஸ்கைப் லைட் செயலியின் செட்டிங்ஸ் உள்ளிட்டவைகளை ஆங்கிலம் தெரிந்திருந்தால்தான் கையாள முடியும் என்ற நிலை மாறி, பிராந்திய மொழிகளிலேயே அந்த செயலியைக் கையாள முடியும். இந்த செயலியை கூகுள் ப்ளேஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தீப்பெட்டிக்கு முன்பாகவே லைட்டர் வந்து விட்டது தெரியுமா?

அறிவியல் எப்போதும் சிக்கலான கால வரிசையை கொண்டிருக்கும். எது எப்போது வெளிப்படும் என்பதை மனிதனால் யூகிக்க முடியாது. அதே போல தான் மிகவும் எளிமையான தீக்குச்சி தீப்பெட்டி போன்றவை கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே லைட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. அதான்ங்க... சிகரெட்களை பற்ற வைக்க நாம் பயன்படுத்துகிறோமே அந்த குட்டி சாதனம்தான்... 1816 இல் ஜெர்மனி வேதியியலாளர் ஜோகன் வுல்ப்காங் என்பவர் லைட்டரை கண்டு பிடித்து விட்டார்.  அதற்கு பின்னர் சில ஆண்டுகள் கழித்து 1827 இல் தான் தீப்பெட்டியும் தீக்குச்சியையும் பிரிட்டனை சேர்ந்த வேதியியலாளர் ஜான் வாக்கர் என்பவர் சல்பைடு, பொட்டாசியம் குளோரேட், பசை, ஸ்டார்ச் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கிறார். தொடக்கத்தில் தனது கண்டுபிடிப்புக்கு காங்கிரேவ்ஸ் என்று பெயரிட்டார். பின்னர்தான் அவை மேட்ச் தீப்பெட்டி, தீக்குச்சி என்ற பெயரை பெற்றன என்றால் ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago