எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, செப்.11 - தமிழகம் முழுவதிலும் உள்ள 42 சுகாதார மாவட்டங்களில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தாய்-சேய் நல மையம் அமைக்கப்படும், 20 புதிய ஆரம்ப சுகாதார நிலையம் துவக்கப்படும், மருத்துவத்துறையில் காலியாக உள்ள 15,600 காலிபணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார். தமிழக சட்டசபையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைவிதி எண்.110ன் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் அவர் கூறியதாவது:
``நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'' என்ற பழமொழியை கருத்தில் கொண்டு, இயன்ற வரை நோய் இல்லா வாழ்வை மக்கள் பெறுவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னோடித் திட்டங்களை எனது அரசு செயல்படுத்தி வருகிறது என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். நோயை முற்றிலுமாக தவிர்ப்பது என்பது இயலாத ஒன்று ஆகும். எனவே தான், நோய் ஏற்படும் போது, அந்த நோயை நீnullக்குவதற்கான மருத்துவ வசதிகளை மக்களுக்கு அளித்து, அனைவருக்கும் நோயற்ற நல்வாழ்வு என்ற உயரிய இலக்குடன், சுகாதார சேவைகளை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், மக்கள் நல்வாழ்வுத் துறையால் செயல்படுத்தப்பட இருக்கும் சில புதிய திட்டங்கள் குறித்து இந்த மாமன்றத்தில் நான் தற்போது எடுத்துரைக்க விழைகிறேன்.
தற்போது மாநிலத்தில் உள்ள 1,589 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 1,539 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் சுகாதார சேவை அளிக்கக் கூடிய வகையில் செயல்பட்டு வருகின்றன. எஞ்சியுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில், விரைவில் மாற்றி அமைக்கப்படும். தரம் உயர்த்தப்பட்ட 283 ஆரம்ப சுகாதார நிலையங்களில், முன்பே நிர்ணயம் செய்யப்பட்ட சிசேரியன் அறுவை சிகிச்சை, அதாவது, எலெக்டிவ் சிசேரியன் செய்வதற்கான வசதிகள் உள்ளன. திடீரென்று, அவசரமாக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யும் வசதி கிராமப்புறங்களில் இல்லை. இதனை nullநீக்கும் வகையில், முதற்கட்டமாக 42 தாய்சேய் நல மையங்கள் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவசரகால சிசேரியன் அறுவை சிகிச்சை மற்றும் ரத்தம் செலுத்தும் வசதியுடன் 24 மணி நேரமும் இந்த தாய்சேய் நல மையங்கள் செயல்படும். சுகாதார மாவட்டம் ஒவ்வொன்றுக்கும் ஒரு மையம் வீதம் இந்த 42 மையங்கள் அமைக்கப்படும்.
மேலும், தொலை தூரத்தில், எளிதில் சென்றடைய முடியாத நிலையில் உள்ள 31 துணை சுகாதார மையங்கள், முதல்நிலை தாய்சேய் நல மையங்களாக தரம் உயர்த்தப்படும். முழு நேர
சேவை அளிக்கும் வகையில், இந்த மையங்கள் ஒவ்வொன்றிலும், 3 செவிலியர்கள் பணி அமர்த்தப்படுவர். இவ்வாறு, 42 தாய்சேய் நல மையங்களை அமைப்பதற்கும், 31 துணை சுகாதார மையங்களை தரம் உயர்த்துவதற்கும், 19 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
கிராமப்புற பெண்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொண்ட எனது அரசு, கிராமப்புற பெண்களின் நலனுக்காக புதிய திட்டம் ஒன்றைச் செயல்படுத்த முடிவெடுத்துள்ளது. கிராமப்புற பெண்கள் இடையே ஆரோக்கியமான நடைமுறைகளை கடைபிடிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வகையில் பரிசோதனை மேற்கொள்ளவும், இந்தத் திட்டம் வழி வகுக்கும். 2 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
மலைப் பகுதிகளில் 20,000 மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் எனவும், சமவெளிப் பகுதிகளில் 30,000 மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் எனவும்
மத்திய அரசால் வரன்முறை செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில், இந்த ஆண்டு, 12 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் 20 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்படும். மேலும், மருத்துவ வசதி குறைவாக உள்ள 38 வட்டாரங்களில் உள்ள 38 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30 படுக்கை வசதி, ஸ்கேன் வசதி மற்றும் அறுவை அரங்குகள்
ஆகிய வசதிகளுடன், 39 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
இன்றைய நவீன யுகத்தில் அனைத்து துறைகளிலும் கணினியின் பயன்பாடு நீnullக்கமற நிறைந்துள்ளது. மருத்துவத் துறையிலும் கணினி பயன்பாடு மிகவும் இன்றியமையாதது ஆகும். நோயாளிகள் பல்வேறு துறைகளைச் சார்ந்த மருத்துவ வல்லுநர்களுடன் கணினி மூலம் நேரடியாகத் தொடர்பு கொண்டு, நோய்கள் குறித்த சந்தேகங்களை தீர்த்துக் கொண்டு சிகிச்சை பெறும் வகையில், கணினி வழி உரையாடும் வசதியை நான் எனது முந்தைய ஆட்சி காலத்திலேயே ஏற்படுத்தினேன். தொலைதூர கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு உயர் மருத்துவ ஆலோசனை கிடைக்கும் வகையில், 5 கோடி ரூபாய் செலவில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெலிமெடிசின் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
தமிழக மக்கள் அனைவரும் நோயற்ற நல்வாழ்வு வாழ நல்ல பல திட்டங்களை நிறைவேற்றி வரும் அதே நேரத்தில், இந்தத் திட்டங்களின் பயன்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும் எனில், துணை சுகாதார மையங்கள் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை தேவையான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் ஓய்வு பெறுவதாலோ அல்லது பணியை விட்டு நீnullங்குவதாலோ ஏற்படும் காலி இடங்கள் மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்படும் பணி இடங்கள் ஆகியவை உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். மக்கள் நல்வாழ்வுத் துறையில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், மருத்துவமனை அடிப்படைப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள்
போன்ற பல்வேறு நிலைகளில் சுமார் 91,600 பணியிடங்கள் உள்ளன. இவற்றில், தற்போது 15,600க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இத்தகைய காலிப் பணியிடங்களுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், ஏற்படப் போகும் காலிப் பணியிடங்களை முன் கூட்டியே கணக்கிட்டு, பணியாளர்களை விரைந்து தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறை இல்லாதது தான் அதற்கு முக்கியமான காரணம் ஆகும்.
இந்த குறைபாட்டை நீnullக்கும் வகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக, மருத்துவத் துறை பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு என்று, மருத்துவத் துறை பணியாளர் தேர்வு வாரியம், அதாவது, மெடிகல் சர்வீசஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையில் இந்திய ஆட்சிப் பணியில் உள்ள கூடுதல் செயலாளர் இந்தத் தேர்வு வாரியத்தின் தலைவராக இருப்பார். மருத்துவத் துறை இணை இயக்குநர் நிலையில் உள்ள ஒரு அலுவலர் உறுப்பினராகவும்; மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள ஒரு அலுவலர் உறுப்பினர்செயலாளராகவும் இருப்பர். வாரியத்திற்கு தேவையான இதரப் பணியாளர்களும் நியமிக்கப்படுவர். தேவைப்படும் பணியாளர்களை தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி இந்த மருத்துவத் துறை பணியாளர் வாரியம் தேர்வு செய்யும். தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவர்களையும் இந்த வாரியம் தேர்வு செய்யும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய விதிமுறைகளில் தக்க திருத்தம் மேற்கொண்ட பின், மருத்துவர்களுக்கான நிரந்தரப் பணியிடங்களும், இந்த தேர்வு வாரியத்தின் மூலமே நிரப்பப்படும்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை தேர்வு செய்ய இது போன்ற தனி வாரியம் அமைக்கப்படுவதால், துணை சுகாதார மையங்கள் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை உள்ள மருத்துவமனைகளில் ஏற்படும் காலியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்படும் என்பதை மன நிறைவுடன் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 6 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2025
04 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2025
04 May 2025 -
கோழிக்கோட்டில் ரூ.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் அதிரடி
04 May 2025திருவனந்தபுரம் : கோழிக்கோட்டில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
-
இம்ரான் கான், பிலாவல் பூட்டோவின் எக்ஸ் தள கணக்குகள் இந்தியாவில் முடக்கம்
04 May 2025புதுடெல்லி : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் எக்ஸ் தள கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.
-
இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல்; அபுதாபியில் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கம்...!
04 May 2025அபுதாபி : இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், டெல் அவிவ் நகரில் தரையிறங்க தயாரான ஏர் இந்தியா விமானம் அபுதாபிக்கு திருப்பி விடப்பட்டது.
-
பொற்கோவில் தாக்குதல் குறித்து ராகுலிடம் சீக்கிய இளைஞர் சரமாரி கேள்வி
04 May 2025புதுடெல்லி : 1984-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது பொற்கோவிலுக்குள் ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியது தொடர்பாக ராகுல்காந்தியிடம் சீக்கிய இளைஞர் ஒருவர் சர
-
ஒப்புதல் பெற்றே பாகிஸ்தான் பெண்ணை மணந்தேன்: சி.ஆர்.பி.எப். வீரர் விளக்கம்
04 May 2025ஸ்ரீநகர் : பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததை மறைத்ததாகக் கூறி சி.ஆர்.பி.எப். வீரரான முனீர் அகமது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சி.ஆர்.பி.எப்.
-
எல்லை தாண்டிய பாக். ராணுவ வீரரை கைது செய்த இந்தியா
04 May 2025ஸ்ரீநகர் : ராஜஸ்தானில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
-
கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி: 2-வது நாளாக குவிந்த சுற்றுலாப் பயணிகள்
04 May 2025கோத்தகிரி : கோத்தகிரியில் நடந்த காய்கறி கண்காட்சியை காண 2-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
-
ஜே.பி.நட்டா பயணித்த கார் பழுது: பின்னால் வந்த வாகனங்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு
04 May 2025தாம்பரம் : தாம்பரம் அடுத்த திருமுடிவாக்கம் அருகே பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பயணித்த கார் திடீரென பழுதானது.
-
பஹல்காம் தாக்குதல்: அரபிக்கடலில் இந்திய கடற்படை மீண்டும் போர் பயிற்சி
04 May 2025மும்பை : இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் உருவாகியுள்ள நிலையில், அரபிக் கடலில் இந்திய போர் கப்பல்கள் திடீர் பயிற்சியில் ஈடுபட தொடங்கி உள்ளன.
-
விசாரணை என்ற பெயரில் கொடுமை கூடாது: போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு
04 May 2025சென்னை : விசாரணை என்ற பெயரில் யாரையும் போலீஸ் அதிகாரிகள் கொடுமை செய்யக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
நீட் வினாத்தாளை ரூ.40 லட்சத்துக்கு விற்க முயன்ற 3 பேர் ராஜஸ்தானில் கைது
04 May 2025ஜெய்ப்பூர் : நீட் வினாத்தாளை ரூ.40 லட்சத்துக்கு விற்க முயன்ற 3 பேர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டனர்.
-
2024 பார்லி., தேர்தலில் போட்டியிடாதது ஏன்? - தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் பதில்
04 May 2025சென்னை : 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடாதது குறித்து தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் பதிலளித்துள்ளார்.
-
உளவு தகவல் சேகரிப்புக்கு அதிநவீன கருவி: வெற்றிகரமாக இந்தியா சோதனை
04 May 2025புதுடில்லி : டி.ஆர்.டி.ஓ., சார்பில் உளவு தகவல் சேகரிப்பு மற்றும் கண்காணிப்புக்கான அதிநவீன கருவி, வான்வெளியில் 17 கிலோமீட்டர் உயரத்தில் பறக்க விடப்பட்டு வெற்றிகரமாக சோதன
-
12-ம் வகுப்பில் மட்டும் பொதுத்தேர்வு போதும்: திருமாவளவன் பேட்டி
04 May 2025சென்னை : 12-ம் வகுப்பில் மட்டும் பொதுத்தேர்வு இருந்தால் போதும் என்பதுதான் வி.சி.க.வின் கருத்து என திருமாவளவன் தெரிவித்தார்.
-
பொன்னமராவதியில் பேருந்து நிலையத்தில் பஸ்சை நிறுத்தாமல் சென்ற அரசு பஸ் டிரைவர் பணியிடை நீக்கம்
04 May 2025பொன்னமராவதி : பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பேருந்தினை நிறுத்தாமல் பயணிகளை அலைக்கழித்த அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
கடற்கொள்ளையர்கள் தாக்குதலை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
04 May 2025திருக்குவளை : நாகை மாவட்ட மீனவர்கள் 24 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதல் விவகாரத்தை கண்டித்து செருதூர் மீனவ கிராமத்தினர் வேலை நிறுத்தப் போரா
-
உத்தரகாண்ட் பத்ரிநாத் கோவில் திறப்பு: பக்தர்களுக்கு மலர் தூவி வரவேற்பு
04 May 2025டேராடூன் : உத்தரகண்டில் உள்ள பத்ரிநாத் கோவில் பக்தா்கள் வழிபாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 4) திறக்கப்பட்டது.
-
128 வயதான யோகா குரு மரணம்: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
04 May 2025புதுடில்லி : பத்மஸ்ரீ விருது பெற்ற 128 வயதான யோகா குரு பாபா சிவானந்த் காலமானார்.
-
சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்: காவல்துறை உறுதி
04 May 2025சென்னை : நீதிமன்றத்தில் எவ்வித பயமுமின்றி சாட்சியங்களை அளிப்பதற்கு ஏதுவாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.
-
தமிழகத்தில் போதை மருந்துகளின் பயன்பாட்டை தடுக்க 41 பறக்கும் படைகள்
04 May 2025சென்னை : தமிழகத்தில் போதை மருந்துகளின் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையில் சுமார் 41 பறக்கும் படைகள், மருந்து ஆய்வாளர்களை கொண்டு அமைக்கப்பட உள்ளது.
-
திருத்துறைப்பூண்டி அருகே ஆம்னி வேன் - அரசுப்பேருந்து மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு
04 May 2025திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே, ஆம்னி வேன் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
-
உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்கு எந்திரம் : மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை
04 May 2025சென்னை : தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள பதவிகளுக்கு இடைக்கால தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
மறைமலை நகரில் இன்று நடைபெறவுள்ள வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் இ.பி.எஸ். பங்கேற்பு
04 May 2025சென்னை : தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு கொளத்தூர் த.ரவி தலைமையில் வணிகர் பாதுகாப்பு மாநாடாக மறைமலை நகரில் இன்று நடைபெறுகிறது.