முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலுவான லோக்பால் மசோதா: ஹசாரே மிரட்டல்

புதன்கிழமை, 2 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

மும்பை.நவ.2 - வருகிற குளிர்  காலக்கூட்டத்தொடரில் வலுரான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற தவறினால் தான் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடர போவதாக சமூக சேவகர் அன்னா ஹசாரா மத்திய அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று கடந்த மழைக்கால பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

வலுவான லோக்பால் மசோதா கொண்டு வரப்பபடும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உறுதி அளித்ததை தொடர்ந்து அவர் தனது உண்ணாவிரதத்தை  கைவிட்டார்.

ஆனால் ஊழலுக்கு எதிரான அந்த வலுரான லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் இன்னும் நிறைவேற்ப்படவில்லை.

இந்த நிலையில்  பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அன்னா ஹசாரே ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

வலுவான லோக்பால்  மசோதா பற்றி மத்திய அரசிலும் காங்கிரசிலும் உள்ள பொறுப்புள்ள மனிதர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள். எனவே ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமா? என்ற சந்தேகத்தை  ஏற்படுத்தியுள்ளது என்று அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

நடக்க இருக்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில்  வலுவான ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்ற தவறினால் குளிர்கால கூட்டத்தொஏடர் முடியும்  நாளில் தான் மீண்டும் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளப்போவதாகவும் அந்த கடிதத்தில்  அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் வருகிற நவம்பர் 22 ம் தேதி துவங்கி டிசம்பர் 23 ம் தேதி முடிவடைகிறது.

குளிர்கால கூட்டத்தொடரின் போது வலுவான ஜன் லோக்பால் மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அரசு தொடர்ந்து உறுதி கூறி வருகிறது.

இதே போல இந்த மசோதைவை  நிறைவேற்றியே தீர வேண்டும் என்று அன்னா ஹசாரே குழுவினர்  வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அன்னா ஹசாரேவின் இந்த கடிதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதைவை நிறைவேற்றாவிட்டால்  அந்த கூட்டத்தொடரின் கடைசி நாலன்று  தான் மீண்டும் உண்ணாவிரதத்தை துவக்க போரதாகவும்  அப்போது தனது  குழுவினர் நாடு முழுவதும் பல்வேறு  இடங்களுக்கு சென்று இந்த பிரச்சினையை மக்கள் முன்பு எடுத்து  சொல்வார்கள் என்றும் அந்த கடிதத்தில் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

கடந்த மாதம் 16 ம் தேதி முதல்  தனது சொந்த கிராமத்தில்த மவுன விரதம் மேற்கொண்டு வரும் அன்னா ஹசாரே பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தான் ஏற்கனவே டெல்லி ராம்லீலா மதைானத்தில் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை  பிரதமர் எழுத்து மூலமாக அளித்த உறுதிமொழியின் பேரில்தான் கைவிட்டதாகவும் அந்த எழுத்து மூலமான உறுதி மொழியை மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்தான் தன்னிடம் வழங்கியதாகவும்  ஹசாரே குறிப்பிட்டுள்ளார்.

வலுவான லோக்பால் மசோதா நாட்டில்  ஊழலை ஒழிக்க உதவிகரமாக இருக்கும் என்றும் அதன் வாயிலாக நாட்டில் அதிகமான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உதவும் என்றும் அந்த  கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் காரணமாக நாட்டில் உள்ள சாதாரண மக்கள் தங்கள்  வாழ்க்கையை தொடருவது கடினமான காரியமாக இருக்கிறது என்றும் ஹசாரே குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக சாதாரண மக்கள் தங்கள் குடும்பத்தை நடத்துவது மிக கடினமான காரியமாக இருக்கிறது.

அரசாங்கம் செலவு செய்யும் ஒரு ரூபாயில் 10 பைசா மட்டுமே வளர்ச்சி  பணிகளுக்கு போகிறது என்றும் வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டால் வளர்ச்சிப்பணிகளுக்கான செலவ அதிகரிக்கும் என்றும்  அதன் மூலம் சாதாரண மக்கள் பயன் அடைவார்கள் என்றும் அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்