முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுடன் இருப்பது கூடா நட்பு: ஹிலாரி கிளிண்டன்

வெள்ளிக்கிழமை, 16 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், டிச. 16 - அமெரிக்கா, பாகிஸ்தான் இடையே உள்ள உறவில் விரிசல் அதிகரித்து வருவதாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானுடனானது கூடா நட்பு என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டர், வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

பாகிஸ்தான் பல்வேறு துறைகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக, விவசாய துறை, எரிசக்தி துறைகளில் திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே போட்டி நிறைந்த சூழ்நிலையில் பொருளாதார வளர்ச்சியடைய முடியும். மேலும் பாகிஸ்தானில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஒரு சிலர் மட்டுமே வருமான வரி செலுத்த முன் வருகின்றனர். ஏராளமானோர் வரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இது பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல. எனவேதான் பாகிஸ்தானிற்கு நிதியுதவி செய்வதை காட்டிலும் ஆப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சிக்கு முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறோம். 

அமெரிக்க, பாகிஸ்தான் நாடுகளிடையே தற்போது ஸ்திரத்தன்மையற்ற நிலை இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானுடனான நட்பு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதை நாங்கள் எக்காலத்திலும் மறுப்பதற்கில்லை. பாகிஸ்தானுடனான நட்பு கூடா நட்புதான் என்றார். கடந்த சில நாட்களுக்கு முன் நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து அமெரிக்கா, பாகிஸ்தான் இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்