முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பியில் மாயாவதி சிலைகள் மூடப்படும்: குரேஷிஅதிரடி

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, ஜன. - 9 - உத்தர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள மாயாவதியின் சிலைகள் திரையிட்டு மூடப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  உத்தர பிரதேச தேர்தலை முன்னிட்டு அந்த மாநில முதல்வர் மாயாவதியின் சிலைகளையும், பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சிலைகளையும் திரையிட்டு மூடுவதென தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இந்த விவகாரம் தேர்தல் நடத்தை விதிமுறைகளோடு தொடர்புடையது. தேர்தலின் போது அரசு அலுவலகங்களில் உள்ள தலைவர்களின் படங்கள், அரசியல் கட்சிகளின் காலண்டர்கள் கூட அகற்றப்படும் என்று தெரிவித்தார். தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வையிட அந்த மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய தேர்தல் ஆணைய குழுவிடம் பல்வேறு அரசியல் கட்சிகளும், இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன. 

தேர்தல் முறையாகவும், நடுநிலையோடும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது. தேர்தல் நடைமுறைகளை நடுநிலையோடு கடைபிடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 7.5 கோடிக்கு கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் பண பரிமாற்றத்தை கண்காணிக்கும் பணியில் வருமான வரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago