எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், ஜன.25 - திண்டுக்கல்லில் பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்றிய செயலாளர் மற்றும் பெண் ஆகிய இருவரை நேற்றுக்காலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தேவேந்திர குல வேளாளர் நிறுவனத் தலைவர் பசுபதி பாண்டியன் திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஜனவரி 10ம் தேதியன்று இரவு படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் கோர்ட்டில் அருளானந்தம், ஆறுமுகசாமி ஆகிய இருவரும் சரணடைந்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது 14 பேர் கொண்ட கும்பல் இச்சதித் திட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இக்கொலை வழக்கில் சுபாஷ் பண்ணையார் முதல் குற்றவாளியாகவும், அருளானந்தம், ஆறுமுகசாமி மற்றும் ராஜபாளையத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் உட்பட 14 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். சரணடைந்த இருவரைத் தவிர தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் நந்தநவனப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மனைவி நிர்மலாதேவி(45) என்பவர் கொலையாளிகளுக்கு உளவு சொல்வதிலும், அவர்கள் தங்குவதற்கு வீடும் பிடித்து கொடுத்தது தெரியவரவே அவரை நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர். அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தியதில் இக்கொலை வழக்கில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய உறுப்பினரான கரட்டழகன்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி(27) என்பவரும் இக்கொலைக்கு உடந்தையாக இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவரையும் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நிர்மலா மற்றும் முத்துப்பாண்டியை நேற்றுக்காலை சுமார் 6 மணியளவில் மாஜிஸ்திரேட் லதா முன்புறம் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் சிறைக்காவலில் அடைக்க அவர் உத்தரவிட்டதின் பேரில் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற முத்துப்பாண்டி
பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் கரட்டழகன்பட்டியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவராக இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகி ஜான் பாண்டியன் கட்சியில் இணைந்தார். இவர் மீது அடிதடி, பஸ் எரிப்பு, மற்றும் ஒரு கொலை வழக்கு உள்ளது. பசுபதி பாண்டியனுக்கு நெருக்கமாக முத்துப்பாண்டி இருந்து வந்ததால் அவரை இக்கொலை திட்டத்திற்கு நிர்மலாதேவி பயன்படுத்திக் கொண்டார். கொலை செய்யப்பட்ட பின்னர் பசுபதிபாண்டியன் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது இறுதி யாத்திரையில் முத்துப்பாண்டியனும் மிகுந்த கவலையோடு சொந்த ஊருக்கு சென்று அடக்கம் செய்து விட்டு திரும்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு
10 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 3-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
10 Dec 2025சென்னை, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
10 Dec 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் ஆலோசனை நடைபெறுகிறது.
-
ஐ.சி.சி. ஒருநாள் பேட்டர்கள் தரவரிசை: கோலி 2-வது இடத்திற்கு முன்னேற்றம்
10 Dec 2025துபாய், ஐ.சி.சி. ஒருநாள் பேட்டர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய முன்னணி வீரர் 2 இடங்கள் முன்னேறி கோலி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
-
அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
10 Dec 2025சென்னை, வருகிற சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி: இந்திய அணி புதிய சாதனை
10 Dec 2025சென்னை, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி மூலம் இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.
அபார வெற்றி....
-
3 வகை கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்கள்: ஜஸ்ப்ரிட் பும்ரா புதிய சாதனை
10 Dec 2025புவனேஷ்வர், டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகை கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 11-12-2025
11 Dec 2025 -
2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம்: சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
11 Dec 2025சென்னை, தமிழகத்தில் விடுப்பட்ட மகளிருக்கு 2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை சென்னையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 11-12-2025
11 Dec 2025 -
எஸ்.ஐ.ஆர். தொடர்பான வழக்கில் ஜனவரி மாதம் இறுதியில் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
11 Dec 2025புதுடெல்லி, எஸ்.ஐ.ஆர் தொடர்பான வழக்கில் ஜனவரி மாதம் இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 11-12-2025
11 Dec 2025 -
தமிழ் கவிஞர் பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
11 Dec 2025சென்னை, தமிழ்ச் சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
செங்கோட்டையன் - நாஞ்சில் சம்பத் சந்திப்பு
11 Dec 2025சென்னை, சென்னையில் த.வெ.க.மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் செங்கோட்டையன் - நாஞ்சில் சம்பத் சந்தித்து பேசி கொண்டனர்.
-
தமிழ்நாடு முழுவதும் 1.50 லட்சம் ஈ.வி.எம். சரிபார்ப்பு பணி துவக்கம்
11 Dec 2025புதுடெல்லி, தமிழகத்தில் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் 1.50 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பு பணி நேற்று முதல் தொடங்கியது.
-
பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் உக்ரைனில் விரைவில் தேர்தல் நடத்தப்படும்: அதிபர் ட்ரம்புக்கு ஜெலன்ஸ்கி பதிலடி
11 Dec 2025கீவ், உக்ரைனில் தேர்தலை நடத்தாமல் இருக்க போரை நடத்துகிறார் ஜெலன்ஸ்கி என்று அதிபர் ட்ரம்ப் கடுமையாக தாக்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தா
-
தமிழ்நாட்டில் மக்களின் வாக்குரிமையை பறிக்க வாய்ப்பு உள்ளது: திருமாவளவன்
11 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மக்களின் வாக்குரிமையை பறிக்கிற வாய்ப்பு உள்ளது நாடாளுமன்றத்தில் திருமாவளவன் தெரிவித்தார்.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்? பி.டி.செல்வகுமார் விளக்கம்
11 Dec 2025சென்னை, நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர் பி.டி.செல்வக்குமார்.
-
டிசம்பர் 14 முதல் பா.ம.க.வில் விருப்ப மனுக்கள் விநியோகம்: அன்புமணி அறிவிப்பு
11 Dec 2025சென்னை, வருகிற 14-ம் தேதி முதல் பா.ம.க.வில் விருப்ப மனுவை தாக்கல் செய்யலாம் என்று அன்புமணி தெரிவித்தார்.
-
கூட்டணி விவகாரத்தில் விஜய்க்கு முழு அதிகாரம்: த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள்
11 Dec 2025சென்னை, த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
11 Dec 2025சென்னை, திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




