முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 7 பேர் காயம்

செவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2012      உலகம்
Image Unavailable

நியூயார்க், அக். 23 - அமெரிக்காவின் மில்வாக்கி நகரில் உள்ள அழகுநிலையம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கியால் சுடப்பட்ட நபர் சம்பவ இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். அதே நேரம் அந்த நபர் தப்பியோடி விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். எனினும் இது தொடர்பாக வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதே மில்வாக்கி நகரில் உள்ள குருத்துவாராவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. திரையரங்கிலும் இதே போல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்